Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
100 ஆண்டுகள் கழித்து மகர சங்கராந்தியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Makar Sankranti 2026: பொதுவாக கிரகங்கள் தனது நிலை மாற்றங்களின் மூலம் மனித வாழ்க்கையில் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் சேர்ந்தோ அல்லது அம்சங்களின் மூலமோ யோகங்களை உருவாக்கி, இன்னும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் அவ்வாறு உருவாகும் யோகங்கள் பண்டிகை காலங்களில் நிகழும் போது, இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த வகையில் 2026 ஜனவரி 14 ஆம் தேதி மதியம் 2.50 மணியளவில் சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையவுள்ளார். அன்றைய தினம் மகர சங்கராந்தியாக கொண்டாப்படுகிறது. இந்த மகர சங்கராந்தி நாளில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் தனுசு ராசியில் மிகவும் சக்தி வாய்ந்த புதாதித்ய ராஜயோகம் உருவாகியிருக்கும். அதுவும் இது 100 ஆண்டுகளுக்கு பின் மகர சங்கராந்தி நாளில் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் திடீர் நிதி ஆதாயங்களையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளனர். இப்போது புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, பிரச்சனைகள் தீர்ந்து, புரிதல் அதிகரிக்கும். பயணங்கள் மற்றும் புதிய நட்புகளால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். திட்டமிட்டு செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். கலைத் துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கியிருந்தால், அதிலிருந்தும் லாபம் குவியும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். உறவுகளில் நல்லிணக்கம் அதிகரிக்கும். மன அமைதி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயுடனான உறவு வலுவடையும். தாய் வழியில் இருந்து நிறைய செல்வத்தைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications