Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
பொங்கலுக்கு பின் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது...
Lakshmi Narayan Rajyog 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவார். இதனால் இந்த புதன் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். தற்போது புதன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இவர் பொங்கல் முடிந்து ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த மகர ராசியில் ஏற்கனவே அசுரர்களின் குருவும், செல்வத்தின் காரணியாகவும் கருதப்படும் சுக்கிரன் உள்ளார். இதனால் மகர ராசியில் சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் மங்களகரமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது செல்வம், செழிப்பு ஆகியவற்றை வழங்கக்கூடியது.
இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் பண மழையில் நனையப் போகிறார்கள். இப்போது பொங்கலுக்கு பின் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் சுக்கிரன் மற்றும் புதனின் ஆசியால் வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைவார்கள். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அந்த சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதோடு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நேர்மறையான பலன்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வருமானம் வேகமாக அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
