Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
18 மாதங்களுக்கு பின் சிம்ம ராசிக்கு செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
Ketu Transit In Leo 2025: ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் கேது ஒரு நிழல் கிரகமாகும். கிரகங்களில் கேது எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பார். இந்த கேது ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார். கேதுவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
பலரும் கேதுவை மோசமான கிரகமாக நினைப்பதுண்டு. ஆனால் உண்மையில் கேது ஒருவரை செல்வந்தராக்கும் அளவில் சக்தி கொண்டவர். தற்போது கேது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 18 ம் தேதி கேது சூரிய பகவானின் ராசியான சிம்ம ராசிக்கு செல்லவிருக்கிறார். சுமார் 18 மாதங்களுக்கு பின் கேது ராசியை மாற்றவுள்ளார்.

அதுவும் கேது சிம்ம ராசிக்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். குறிப்பாக நிதி நிலையில் நல்ல உயர்வை காணவுள்ளனர். இப்போது கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
கேது பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள். வேலை அல்லது வணிகம் தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகளும் நிறைவேறும்.
துலாம்
கேது பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தங்களின் வருமானத்தில் நல்ல வளர்ச்சியை காண்பார்கள். முக்கியமாக நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நிறைய லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரியில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் கேது பெயர்ச்சியால் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் காணவுள்ளார்கள். முக்கியமாக புதிதாக ஏதாவது ஒன்றை கற்க ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட காலமாக புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், இந்த கேது பெயர்ச்சிக்கு பின் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாமியார்-மாமனாருடனான உறவில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உறவு மேம்படும். பண பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அது முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications