Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
18 ஆண்டுக்கு பின் புதனும்-கேதுவும் இணைவதால் இந்த 4 ராசிக்காரரங்க புதிய சொத்துக்கள் வாங்கப்போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு கிரக இயக்கமும் வெவ்வேறு வகையான பலன்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கிரக மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வெவ்வேறு பலன்களை வழங்குகிறது. சில கிரகங்கள் இணையும் போது அவை சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்குகின்றன.
கேதுவும், புதனும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக இணையப்போகிறார்கள். இந்த இணைப்பு அனைத்து ராசிகளிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவருகிறது. கிரகங்களின் இளவரசரான புதன் சிம்ம ராசிக்குள் நுழையப் போகிறார் மற்றும் நிழல் கிரகமான கேது ஏற்கனவே சிம்ம ராசியில் இருக்கிறார். இந்த சக்திவாய்ந்த இணைப்பு சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
கேது மற்றும் புதன் இணைவதால், சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது. இது அவர்களின் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை வழங்கப்போகிறது. அவர்களின் அதிர்ஷ்டக்கதவுக்கான சாவி இப்போது அவர்களிடம் கிடைக்கப்போகிறது. வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பல ஆச்சரியமளிக்கும் லாபத்தை எதிர்பார்க்கலாம்.
வேலையில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்பிற்கான பலன்களை இப்போது அனுபவிப்பார்கள். கூட்டு வணிகத்தில் இருப்பவர்களுக்கு இப்போது பெரிய வெற்றிகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பொருத்தமான துணை கிடைக்கும். திருமணமானவர்களுக்கு இது மகிழ்ச்சியான காலமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, கேது மற்றும் புதன் நேர்மறையான மாற்றங்களை அளிக்கப்போகிறது. வியாபாரிகளுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்பாராத லாபங்கள் காத்திருக்கின்றன. அவர்களிடம் ஒப்படைக்கப்படும் வேலைகளை சரியாக முடிப்பார்கள். சமூகத்தில் அவர்களுக்கு கௌரவமும், பெருமையும் கிடைக்கும்.
அவர்களின் புதிய முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்க இது சரியான காலமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
தனுசு
கேது மற்றும் புதன் இணைவு தனுசு ராசிக்காரர்களுக்கு பல சாதகமான பலன்களைத் தரும். வாழ்க்கையில் பல எதிர்பாராத ஆச்சரியங்கள் சம்பவங்கள் நடைபெறலாம். அதிர்ஷ்டம் பல வழிகளிலிருந்து அவர்களைத் தேடி வரும். நீண்ட பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் அவர்கள் பல நன்மைகளை அடையலாம்.
புதிய முதலீடுகளை செய்வதற்கு இது சரியான காலமாகும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி லாபங்களை பெற வேண்டிய நேரமிது. ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும், கடுமையாக உழைக்க உறுதுணையாக இருக்கும். குடும்பத்தினரிடமிருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் நிலவும் பெரும்பாலான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
மகரம்
கேது மற்றும் புதன் இணைவு மகர ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலக்கட்டத்தில் அவர்களின் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகிறது. மேலும், வெளிநாடு பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் காத்திருக்கின்றன.
இந்த காலகட்டத்தில் அவர்களின் நிதி நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். அனைத்து பிரச்சனைகளும் மிக எளிதாக தீர்க்கப்படலாம். கடன் சுமைகள் வெகுவாகக் குறையலாம். அவர்களின் நீண்டகால ஆசைகளில் ஒன்று நிறைவேறும். ஆரோக்கியம் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
