Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
50 ஆண்டுகள் கழித்து உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Kendra Tirkon Rajyog In Taurus 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் மற்ற கிரகங்களின் ஒன்றிணைந்தோ அல்லது அம்சங்களினாலோ, சுப மற்றும் ராஜயோகங்கள் உருவாகி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஜூன் மாதத்தில் ஒரு அற்புதமான ராஜயோகம் உருவாகவுள்ளது. அசுரர்களின் குருவான சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையும் போது, இந்த ராஜயோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த சுக்கிர பெயர்ச்சியால் மாளவ்ய ராஜயோகம் மட்டுமின்றி கேந்திர திரிகோண ராஜயோகமும் உருவாகவுள்ளன. இந்த ராஜயோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் மகத்தான உயர்வு ஏற்படப் போகிறது. முக்கியமாக சில ராசிக்காரர்களின் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. இப்போது கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். அதாவது பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு பல மடங்கு லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும். பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகத்தால் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படலாம். தொழில் தொடர்பான புதிய திட்டங்களை செயல்படுத்தி நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கூட்டு தொழிலைத் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இது எதிர்காலத்தில் நல்ல லாபத்தை வழங்கும் வகையில் இருக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசித்து, ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். காதல் விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். ஊடகம், ஆன்லைன் வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
