Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
100 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சூரியன்-சுக்கிரன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், செல்வமும் குவியும்!
Karwa Chauth 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். தற்போது சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். மறுபுறம் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சுக்கிரன் அக்டோபர் 09 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் கன்னி ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் வடஇந்தியாவில் திருமணமான பெண்கள் தனது கணவரின் ஆயுள், ஆரோக்கியத்திற்காக மேற்கொள்ளும் விரதமான கர்வா சௌத் நாளில் உருவாகிறது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக தொழில் ரீதியாக நல்ல வெற்றியையும், நிதி நிலையில் நல்ல உயர்வையும் காணவுள்ளனர். இப்போது கன்னியில் ஒன்றிணையும் சூரியன் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பேச்சுத்திறன் மிகவும் சிறப்பாக இருக்கும். இதனால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலை வெற்றிகரமாக முடிவடைவதோடு, நல்ல லாபமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் உங்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணியிடத்தில் உங்களை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளை மகிழ்ச்சியடைய வைக்கும். இதனால் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications