Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
10 ஆண்டுகள் கழித்து குரு-சுக்கிரன் உருவாக்கும் திருஷ்டி யோகம்: நவம்பரில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்!
Kendra Drishti Yog On November 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது அம்சங்களின் மூலமோ சுப அல்லது ராஜயோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் சேர்ந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
இந்த யோகமானது நவம்பர் 03 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் போது குருவும், சுக்கிரனும், ஒருவருக்கொருவர் 90 டிகிரி கோணத்தில் இருப்பார்கள். முக்கியமாக இவ்விரு கிரகங்களினால் உருவாகும் இந்த யோகமானது 10 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

இதன் விளைவாக தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்புள்ளது. இப்போது குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
கேந்திர திருஷ்டி யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாயப்பு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவுகள் நனவாகும். ஊடகம், கல்வி தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
ரிஷபம்
கேந்திர திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்தும், கௌரவமும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். வணிகர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கேந்திர திருஷ்டி யோகத்தால் வருமானத்தில் கணிசமான உயர்வைக் காண்பார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிமும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications