Latest Updates
-
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம்
குருபகவான் மிதுன ராசிக்கு செல்வதால் 2025-ல் இந்த 4 ராசிக்காரங்க வெளிநாட்டுக்கு போகப்போறாங்களாம்...!
Jupiter Transit 2025: ஜோதிட சாஸ்திரத்தில் வியாழன் மிகவும் முக்கியமான கிரகங்களில் ஒன்றாகும். வியாழனின் ஆசீர்வாதம் ஒருவருக்கு முழுமையாக கிடைத்தால் ஒருவர் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும். பொருளாதாரச் சுமைகளைக் கடக்கவும், பயணம் செய்யவும், அதிக பணம் சம்பாதிக்கவும் மற்றும் அறிவைப் பெருக்கவும் குருபகவானின் ஆசீர்வாதம் அவசியமானதாகும்.
2025 மே மாதத்தில் வியாழன் மிதுன ராசிக்கு நகர்கிறது. வியாழனின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மே மாதம் முதல் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் தெரியும். அவர்கள் வெளிநாட்டிற்கு செல்லும் அதிர்ஷ்டம் கிடைக்கும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் வியாழன் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் நிதி நிலையில் முன்னேற்றம் அடையலாம். இந்த கிரக பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் . தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். அவர்கள் விரும்பியபடி செல்வம் மற்றும் பணம் சம்பாதிக்கலாம். வாழ்க்கையில் கடினமான கட்டம் அவர்களை விட்டு தூரமாக செல்லும்.
அவர்கள் வாழ்வில் பல மகிழ்ச்சியான அனுபவங்களைப் பெறுவார்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும். வேலை அல்லது வியாபாரம் சம்பந்தமாக அவர்கள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வார்கள். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் வியாழனின் பெயர்ச்சி நடப்பதால் அவர்களுக்கு குரு யோகம் உருவாகிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் சம்பாதிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு சொத்து, நிலம், வாகனம், வீடு வாங்க அதிர்ஷ்டம் உருவாகும். மாணவர்கள் பல போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். அவர்களின் பொருளாதார சிக்கல்கள் இப்போது முடிவுக்கு வரும்.
வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் மூலம் வேலை கிடைக்கும், மேலும் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கும் வாய்ப்பைப் பெறலாம் மற்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம்.மிதுன ராசி மாணவர்கள் வெளிநாட்டிற்க்கு சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உருவாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் வேலையில் சிறந்து விளங்க முடியும். பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், உயர்கல்விக்காக வெளிநாடு செல்லலாம். இந்த ராசிக்காரர்கள் பல துறைகளில் பணத்தை முதலீடு செய்யலாம், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்கள் குடும்பத்தை உடன் அழைத்துச்செல்லலாம். இந்த சொந்தக்காரர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து நிறைய உதவிகளைப் பெறுவார்கள். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு பொன்னான நேரமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வேலை தொடர்பாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகலாம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை வெளிநாடுகளில் தொடங்கலாம். இதன் மூலம் கணிசமான லாபத்தை ஈட்டலாம். மாணவர்கள் தங்கள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகும். திருமணமான தம்பதிகள் ஹனிமூனுக்கு வெளிநாடு செல்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
