Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
குருபகவான் மிதுன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் இந்த 3 ராசிக்காரர்கள் பெரிய நஷ்டங்களை சந்திக்கபோறாங்களாம்...
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவானுக்கு அடுத்தபடியாக சுழற்சியை முடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் அடுத்த கிரகம் வியாழன் என்று அழைக்கப்படும் குருபகவனாகும். வியாழனின் ஒவ்வொரு பயணமும் 13 மாதங்கள் நீடிக்கும், அதாவது வியாழன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு 13 மாதங்கள் ஆகும். அதேபோல வியாழனின் வக்ர பெயர்ச்சியும் ஜோதிடத்தில் குறிப்பிடத்தக்கதாகும். சராசரியாக, வியாழன் குறைந்தது வருடத்திற்கு ஒரு முறை வக்ர பெயர்ச்சி அடைகிறது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி இரவு 10:01 மணிக்கு குருபகவான் மிதுன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். வியாழனின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மற்றவர்களுடன் தொடர்புகொள்வதிலும், உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும், உங்களுக்குத் தேவைப்படும்போது உங்களுக்குத் தேவையான உதவியைப் பெறுவதிலும் குறிப்பிடத்தக்க சிரமங்களைச் சந்திப்பீர்கள். இந்த குருபெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமான முடிவுகளை வழங்காது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாழன் 8-ஆம் வீட்டு அதிபதியாகவும், 11ஆம் வீட்டு அதிபதியாகவும் இருக்கிறார். வியாழனின் மூல திரிகோண ராசி 8 ஆம் வீட்டில் வருவதால், வியாழன் 2 ஆம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைவதால், குருபகவான் ரிஷபத்திற்கு தீங்கிழைக்கிறார். எனவே வியாழன் 2 ஆம் வீட்டில் நகரும் போது, வியாழன் நிதி விஷயங்கள் அல்லது தனிப்பட்ட உடைமைகள் தொடர்பான சில தடைகளை உருவாக்கலாம்.
இந்த காலகட்டத்தில் நிதித் துறையில் பணிபுரிபவர்கள் அல்லது பெரிய முதலீடுகளைச் செய்பவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். ரிஷப ராசிக்காரர்கள் முதலீடுகளைப் பற்றி நன்கு அறிந்துகொள்வதோ அல்லது அவர்களின் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துவதன் மூலமோ பயனடையலாம். இந்த காலகட்டத்தில் குடும்ப உறவிலும் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
கடகம்
குருபகவான் கடக ராசிக்காரர்களுக்கு 6 ஆம் வீட்டையும் 9 ஆம் வீட்டையும் ஆட்சி செய்கிறார், இப்போது 12 ஆம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். முதலீடுகள் அல்லது நிதி தொடர்பாக அவர்கள் சில சவால்களை எதிர்கொண்டாலும், அவர்களின் வலுவான ஆன்மீக உறவுகள் சவாலான சூழ்நிலைகளை கருணையுடன் கையாள அவர்களுக்கு உதவுகின்றன.
இந்த காலகட்டங்களில் முடிவெடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். ஏனெனில் அவர்களின் சில தவறான முடிவுகள் அவர்களுக்கு பெரிய நஷ்டங்களை ஏற்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் வெளியூர் பயணம் அல்லது இடமாற்றம் தடைகள் மற்றும் தாமதங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் அதிர்ஷ்டம் நல்லதில் இருந்து கெட்டதாக மாறும் காலமிது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குருபகவான் 3-ம் மற்றும் 12-ம் வீட்டிற்கு அதிபதியாகி இப்போது 6-வது வீட்டில் வக்ர நிலை அடைகிறார். இந்த நிலை மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் எதிர்மறையாக மாறுகிறது. அவர்கள் பேச்சில் தடுமாற்றம் ஏற்படலாம், மேலும் சக ஊழியர்களுடன் மோதல்கள் ஏற்படலாம், அவர்கள் உங்களை மோசமான சூழ்நிலைகளில் ஆழ்த்தலாம் மற்றும் அவர்களை தவறான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3 மற்றும் 6 ஆம் வீட்டிற்கு அதிபதியாக இருந்து வியாழன் 6 ஆம் வீட்டில் பின்வாங்குவதால் உங்களுக்கு தோல் ஒவ்வாமை, தொண்டை அல்லது சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம், சிலருக்கு ஆபத்தான விபத்துகள் கூட ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இது மிகவும் சவாலான காலகட்டமாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
