குரு வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?

Jupiter Retrograde In Gemini 2025: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார் மற்றும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். ஜோதிடத்தில் குரு செழிப்பு, அறிவு, ஆன்மீகம், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவான் நவம்பர் 11 ஆம் தேதி மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் குரு பகவான் 2026 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி வரை இருப்பார். குரு பகவான் வக்ரமாவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

Jupiter Retrograde In Gemini 2025 List Of Lucky Zodiac Signs

அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து வாழ்க்கை செழிப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இப்போது மிதுன ராசியில் குரு வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் ஒரு புதிய சாதனையை படைப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் புதிய திட்டங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்களின் மதிப்பும் மதியாதையும் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். அதாவது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை மேம்படும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, July 7, 2025, 20:45 [IST]
Desktop Bottom Promotion