Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
12 ஆண்டுகளுக்கு பின் குரு-சனி உருவாக்கும் விபரீத ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Vipreet Rajyog On Dhanteras 2025: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். ஆனால் இந்த ஆண்டு அதிவேகமாகவும், ஆக்ரோஷமாகவும் பயணிக்கிறார். இதனால் இரண்டு முறை குருவின் ராசி மாற்றம் நிகழவுள்ளது. அதில் ஏற்கனவே ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மிதுன ராசிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் அக்டோபர் 18 ஆம் தேதி, அதாவது தந்தேராஸ் நாளில் குரு பகவான் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் டிசம்பர் 05 ஆம் தேதி வரை இருந்து, பின் மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைவார். இப்படி குரு பகவான் கடக ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதே வேளையில் சனி பகவான் குரு பகவானின் மீன ராசியின் பின்னோக்கி வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இதன் காரணமாக குரு மற்றும் சனியால் விபரீத ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சனி, குருவால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சனியால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதுவரை தொழிலில் தடைகளை சந்தித்து வந்தால், அது நீங்கும். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிறைய லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். பணப் பிரச்சனைகள் நீங்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு, சனியால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் ஒவ்வொரு துறையிலும் நல்ல நன்மை கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும். குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும், நல்ல லாபமும் கிடைக்கும். வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தில் இரட்டிப்பு லாபம் கிடைத்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் குரு சனியால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் ஒவ்வொரு துறையிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டி, புதிய பொறுப்புக்களை வழங்கலாம். இந்த யோகத்தால் ஒவ்வொரு வேலையிலும் உங்களின் எதிரிகளை தோற்கடித்து வெற்றி காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications