Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2026-ல் இந்த 4 ராசிக்கார்களுக்கு அவங்க ஆசைப்பட்ட மாதிரியே திருமணம் நடக்கபோகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2026: 2026 பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஜோதிடரீதியாக இந்த ஆண்டு பல ராசிக்காரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் சில முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடக்கப் போகின்றன. அவற்றில் ஒன்று குரு பெயர்ச்சி. அடுத்த ஆண்டு, குருபகவான் 2026-ல் கடக ராசிக்கு நகர்கிறார். இதன் அர்த்தம் என்னவெனில் வீடு, குடும்பம் மற்றும் உறவுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. அதைத் தொடர்ந்து சந்திரனும் தனது ராசியை மாற்றப்போகிறது.
2026-ல் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு உறவுகளில் சாதகமான நிலைகளை ஏற்படுத்தப்போகிறது. இதன் விளைவாக அவர்கள் திருமண உறவில் நுழைவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் 2026-ல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026-ஆம் ஆண்டு உறவுகள் அடிப்படையில் சிறப்பான ஆண்டாக இருக்கும். 2026 ஆம் ஆண்டு வலுவான உணர்ச்சி நிலைத்தன்மையைக் கொண்டுவருகிறது. ஆண்டின் நடுப்பகுதியில் கிரக அமைப்பு நீண்ட கால உறவுகளையும், திருமணத்திற்கான செய்து கொள்வதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.
நீங்கள் ஏற்கனவே காதல் உறவில் இருந்தால், இந்த ஆண்டு நீங்கள் இறுதியாக திருமணம் செய்து கொள்ளலாம். உங்கள் ஆளும் கிரகமான சுக்கிரன் உங்களுக்கு வசீகரத்தையும் ஆழமான தொடர்பையும் அளிக்கிறார். சிங்கிளாக இருப்பவர்கள் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் சிறப்பான ஒருவரை சந்திக்கலாம், இந்த உறவு திருமணத்தில் முடிவடைய வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, 2026 ஆம் ஆண்டு உணர்வுகள் அடிப்படையில் மிகவும் நிறைவான ஆண்டாக இருக்கும். நீண்ட கால காதல் திருமணமாக மாறுவதற்கான அற்புதமான காலகட்டத்தை கிரகங்கள் குறிக்கிறது. கடக ராசிக்காரர்கள் குடும்பம் அல்லது நண்பர்கள் மூலம் தங்கள் வாழ்க்கைத் துணையைச் சந்திக்கலாம். இந்த ஆண்டு அவர்களின் உள்ளுணர்வு சக்திவாய்ந்ததாக இருக்கும், இது சரியான வாழ்க்கைத்துணையை நோக்கி அவர்களை வழிநடத்தும் ஆண்டாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு உறவுகளில் அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும். குருபகவானின் ஆசீர்வாதத்தால் 2026 ஆம் ஆண்டு அவர்களின் திருமண முயற்சிகள் முடிவுக்கு வந்து இறுதியாக அவர்கள் திருமண பந்தத்தில் இணையலாம். அவர்களின் வேலை மற்றும் காதல் வாழ்க்கைக்கு இடையில் சமநிலை ஏற்படலாம். செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில், கன்னி ராசிக்காரர்கள் காதலை முன்மொழிவது அல்லது நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம். அவர்களின் உள்ளுணர்வு அவர்களுக்கு மகிழ்ச்சியான காதல் உறவை பரிசளிக்கப்போகிறது.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு உறவுகளில் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் ஆண்டாக இருக்கப்போகிறது. வரப்போகிற ஆண்டு அவர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை திறக்கப்போகிறது. சனிபகவானின் சாதகமான நிலை அர்த்தமுள்ள உறுதிமொழிகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் உறவுகளை ஆதரிக்கிறது. பல மகர ராசிக்காரர்கள் வேலை அல்லது விழாக்களில் தங்கள் வாழ்க்கைத்துணையை சந்திக்கலாம். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைத் திட்டமிடுபவர்களுக்கும் இது ஒரு சிறப்பான ஆண்டாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












