Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Horoscope 2025: 2025-ல் இந்த 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்...!
Horoscope 2025: இன்னும் ஒரு மாதத்தில் 2024 ஆம் ஆண்டு முடியப்போகிறது. வரப்போகிற ஆண்டு தங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் இப்போதே தொடங்கியிருக்கும். 2025 ஆம் ஆண்டு கணிப்புகளின் படி சில ராசிக்காரர்கள் வாய்ப்புகளையும், சில ராசிக்காரர்கள் தடங்கல்களையும் எதிர்கொள்ள போகிறார்கள்.
ஜோதிட கணிப்புகள் ஒருவரின் பிறந்த ராசியுடன் நின்று விடுவதில்லை, ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையிலும் கணிப்புகள் செய்யப்படுகிறது. அதன்படி மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் 2025 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செழிப்பையும், முன்னேற்றத்தையும் அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அஸ்வினி
2025 ஆம் ஆண்டு அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறப்பான பலன்களை தரும் ஆண்டாக இருக்கும். அவர்களின் கடின உழைப்பும், மன உறுதியும் அவர்களை பெரிய சாதனைகளை நோக்கி அழைத்துச் செல்கின்றன. அவர்களுக்கு எதிர்பாராத பண பலன்கள் உண்டாகும்.
வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரும். மேலும் சுக்கிரனின் ஆசீர்வாதம் இருப்பதால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமானதாக முடியும். மொத்தத்தில் இந்த வருடம் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு சகல செல்வங்களையும் தரப்போகிறது.
ரோகிணி
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டகரமான ஆண்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வியாபாரத்தில் பெரிய சாதனைகளும், லாபமும் இந்த ஆண்டு காத்திருக்கிறது. இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் நீங்கி அவர்களின் நிதிநிலை அதிகரிக்கும்.
மேலும் அவர்கள் செல்வத்தை ஈர்க்கும் ஒரு சிறப்பு திறனை இந்த வருடம் பெறுவார்கள். இந்த ஆண்டு நிதித் திட்டமிடலிலும் சிறப்பாக செயல்படுவார்கள், இது அவர்களின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
மிருகசீரிஷம்
மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு 2025 ஒரு அற்புத ஆண்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அவர்களின் கை ஓங்கி இருக்கும், அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும்.
அவர்களின் பணக்கஷ்டங்கள் இந்த வருடம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி, 2024ம் ஆண்டு வாழ்வில் ஏற்பட்ட அனைத்து வகையான நெருக்கடிகளுக்கும் இது முடிவு கட்டும் ஆண்டாக இருக்கும். சுக்கிரன் அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவாக இருப்பார்.
பூசம்
2025 ஆம் ஆண்டு பூச நட்சத்திரக்காரர்களுக்கு செழிப்பும், வளர்ச்சியும் நிறைந்த ஆண்டாக இருக்கும். இதனால் பணக்கஷ்டம் பற்றிய கவலை அவர்களை விட்டு நீங்கும். நிதிநிலையில் தொடர்ச்சியான முன்னேற்றமும், தனிப்பட்ட வளர்ச்சியிலும் திருப்தியும் கிடைக்கும்.
தங்களின் வளர்ச்சி மட்டுமின்றி மற்றவர்களின் வளர்ச்சிக்கும் அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும். அவர்களின் நல்ல எண்ணங்களாலும், மற்றவர்களுக்கு உதவும் குணத்தாலும் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைவார்கள்.
ஆயில்யம்
2025-ல் ஆயில்ய நட்சத்திரக்காரர்களை அதிர்ஷ்டமும், செல்வமும் வரும். பொதுவாகவே அவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள், அவர்களின் உழைப்புக்கான பலன்கள் 2025-ல் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும். இதன் விளைவாக 2025 அவர்களுக்கு வெற்றிகரமான ஆண்டாக மாறும்.
2025 அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது, அவர்கள் வியாபாரத்தில் பெரிய வெற்றியை அடைய முடியும். அது அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் பிரதிபலிக்கும். வியாபாரிகள் மட்டுமின்றி வேலையில் இருப்பவர்களுக்கும் இந்த ஆண்டு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
திருவோணம்
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் 2025-ல் பெரும் செல்வத்தைப் பெறுகிறார்கள். 2025 கணிப்புகளின் படி பொருளாதார ஸ்திரத்தன்மையை அடையும் நட்சத்திரங்களில் திருவோண நட்சத்திரமும் ஒன்றாக உள்ளது. அவர்கள் தொழில், முதலீடுகள் அல்லது புதிய முயற்சிகள் மூலம் நிதி வளர்ச்சியைப் பெறுகிறார்கள். அவர்கள் மிகவும் துல்லியமாக நிதி முடிவுகளை எடுப்பார்கள். அதிர்ஷ்டம் மட்டுமின்றி அவர்களின் புத்திக்கூர்மையும் அவர்களுக்கு 2025-ல் துணையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
