Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
குரு புஷ்ய யோகத்தால் அடுத்த வாரம் இந்த 3 ராசிக்கு லட்சுமி தேவியின் ஆசியால் பண மழை பொழியப்போகுது...
Guru Pushya Yoga On 24 October 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி, சுப மற்றும் அசுக யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அக்டோபர் மாத இறுதியில், அதாவது அக்டோபர் 24 ஆம் தேதி சுப யோகம் உருவாகவுள்ளது. அது தான் குரு புஷ்ய யோகம்.
ஜோதிட சாஸ்திரத்தில் குரு புஷ்ய யோகம் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வியாழக் கிழமைகளில் புஷ்ய நட்சத்திரம் வந்தால், அது குரு புஷ்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த யோக நாளில் புதிய வாகனம் வாங்குவது, சொத்து வாங்குவது, முதலீடுகளை செய்வது போன்ற சுப காரியங்களை மேற்கொள்வது நல்லது.

இது தவிர சில ராசிக்காரர்களுக்கு இந்நாள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதுவும் லட்சுமி தேவியின் ஆசியால் நல்ல நிதி நன்மைகளும், அதிர்ஷ்டத்தின் ஆதரவும் கிடைக்கும். பஞ்சாங்கத்தின் படி, குரு புஷ்ய யோகம் அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 25 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இப்போது குரு புஷ்ய யோகத்தால் லட்சுமி தேவியின் ஆசியால் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு புஷ்ய யோகத்தால் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். புதிய சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்கும் ஆசை நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவு உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். புதிய தொழிலை தொடங்கினால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலை வலுவடையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு புஷ்ய யோகத்தால் சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகளால் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு புஷ்ய யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். கூட்டு தொழில் செய்து வந்தவர்கள் இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அப்பிரச்சனை முடிவுக்கு வருஐம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்ளலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை தேடி வரலாம். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications