Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
1 வருடம் கழித்து நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றிகள் குவியப்போகுது...
Guru Peyarchi 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களிலேயே மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தேவர்களின் குருவாக கருதப்படுகிறார். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான இவர் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு பகவான் சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் மே மாதத்தில் குரு பகவான் ராசியை மாற்றவுள்ளார். அப்போது புதனின் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். குரு பகவான் மிதுன ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம் ஏற்படப் போகிறது.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் இதுவரை பிரச்சனைகளை, சவால்களை சந்தித்து வந்தால், குரு பெயர்ச்சிக்கு பின் வெற்றியையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது மிதுனம் செல்லும் குரு பகவானால் தொழிலில் வெற்றிகளைக் குவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
2025 குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் மிதுன ராசியின் லக்ன வீடான முதல் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு சம்பளத்துடனான வேலை தேடி வரும். சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள்.
துலாம்
2025 குரு பெயர்ச்சியின் போது துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். 9 ஆவது வீடு அதிர்ஷ்ட வீடாகும். குரு பகவான் அதிர்ஷ்ட வீட்டிற்கு செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், நல்ல உயரத்தை அடையலாம். இதுவரை வேலையில் தடைகளை சந்தித்து வந்தால், அந்த தடைகள் நீங்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிறைய தொண்டுகளை செய்வீர்கள்.
ரிஷபம்
2025 குரு பெயர்ச்சியின் போது ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். செல்வம் மற்றும் பேச்சின் வீட்டிற்கு குரு பகவான் செல்லப் போகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வேலையில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். திருமணமான தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்து, அதை முயற்சித்தால் குரு பகவானின் ஆசியால் நல்ல பலன்களைப் பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
