Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
பிப்ரவரியில் உருவாகும் 2 கொடூர யோகங்கள்: இந்த 3 ராசிக்காரர்களை வெச்சு செய்யப்போகுது..
Grahan And Angarak Yog In Aquarius On February 2026: ஜோதிடத்தின் படி, பிப்ரவரி மாதத்தில் ஏராளமான யோகங்கள் உருவாகவுள்ளன. அதில் பலவித ராஜயோகங்கள் உருவானாலும், 2 அசுப யோகங்களும் உருவாகவுள்ளன. அதுவும் இந்த அசுப யோகங்கள் சனி பகவானின் கும்ப ராசியில் உருவாகவுள்ளன. அதில் முதலாவது கிரகண யோகம், இரண்டாவது அங்காரக யோகம். இந்த இரண்டு யோகங்களும் தீங்கு விளைவிக்கும் கொடூர யோகங்களாக கருதப்படுகின்றன.
வேத நாட்காட்டியின் படி, பிப்ரவரி 16 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான ராகு பயணித்து வருகிறார். இதனால் கும்ப ராசியில் ராகு மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது.

அதற்கு முன் பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழைந்து, ராகுவுடன் சேர்ந்து கிரகண யோகத்தை உருவாக்கவுள்ளார். இப்படி கும்பத்தில் உருவாகும் 2 அசுப யோகங்களினால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் சிரமங்கள் அதிகரிக்கும். இப்போது பிப்ரவரியில் உருவாகும் 2 அசுர யோகங்களால் அதிகம் கஷ்டப்படப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் அங்காரக மற்றும் கிரகண யோகங்கள் உருவாகவுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல சிரமங்களை சந்திப்பார்கள். முக்கியமாக செலவுகள் அதிகரிக்கும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சட்ட மோதல்களில் சிக்கிக் கொள்ளலாம். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் குடும்ப சூழல் மிகவும் மோசமாக இருக்கும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இதன் விளைவாக உறவுகளில் விரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் அங்காரக மற்றும் கிரகண யோகங்கள் உருவாகவுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்தில் பெரிய சரிவைக் காணலாம். திருமணமாகாதவர்களுக்கு வரன் கிடைக்காது. திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் தொடர்ச்சியாக இழப்புக்களை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் இந்த மாதம் மன அழுத்தத்தால் அதிகம் சிரமப்பட நேரிடும்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் அங்காரக மற்றும் கிரகண யோகங்கள் உருவாகவுள்ளன. இதன் விளைவாக வருமானம் குறையும். பல வழிகளில் இருந்து பிரச்சனைகள் தேடி வரும். முதலீடுகளில் இருந்து இழப்புக்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் ஏமாற்றமடையக்கூடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் தலைத்தூக்கும். மொத்தத்தில் இம்மாதத்தில் பல வகையான மன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
