Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகத்தால் ஜூலை 22 முதல் சிம்மம் உட்பட 3 ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது..
Gajkesari Rajyog On 22 July 2025: ஜோதிடத்தில் கிரகங்கள் அதன் நிலைகள் மற்றும் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து உருவாக்கும் யோகங்களின் மூலம் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் பல சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகலாம்.
அந்த வகையில் ஜூலை மாதத்தில் ஒரு சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாகவுள்ளது. அது தான் கஜகேசரி ராஜயோகம். இந்த ராஜயோகமானது ஜோதிடத்தில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இது குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகக்கூடிய ராஜயோகமாகும். இப்படிப்பட்ட குரு பகவானும், சந்திரனும் ஜூலை 22 ஆம் தேதி ஒன்றிணைந்து மிதுன ராசியில் கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது மிதுன ராசியில் உருவாகும் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான யோகங்களும் கிடைக்கும். வருமானத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவுகளில் இருந்த விரிசல் அனைத்தும் முடிவுக்கு வரும். ஒவ்வொரு வேலையிலும் தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் கழித்து பழைய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் புனித யாத்திரை செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான எந்த பெரிய கவலையும் நீங்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இக்காலத்தில் முதலீடுகளை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். வேலையை நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கவும் விற்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல ஆதாயத்தைத் தருவதாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காண்பார்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டைப் பெறும். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். குருவின் ஆசியால் வெளிநாட்டில் வணிகம் செய்ய நினைப்பவரின் ஆசை நிறைவேறும். குடும்பத்தில் அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
