Latest Updates
-
தாஜ் மஹால் கட்டப்பட்ட நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் தெரியுமா? அவர் ஏன் நிலத்தை கொடுத்தார் தெரியுமா? -
தந்தேராஸில் உருவாகியுள்ள 2 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்! -
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா?
கஜகேசரி ராஜயோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. சில சமயங்களில் ஒரு கிரகம் மற்ற கிரகங்களுடன் இணைந்து சக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகிறது. இந்த ராஜயோகங்கள் அனைத்து ராசிக்காரர்கள் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் இந்த யோகங்களால் மகத்தான அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
நவம்பர் 10, 2025 அன்று, சந்திரன் கடக ராசியில் நுழைந்து குருவுடன் இணைகிறார். இந்த இணைப்பு சக்திவாய்ந்த கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது, அதே நேரத்தில் குரு ஏற்கனவே கடகத்தில் ஹம்ச மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இந்த இரண்டு ராஜயோகங்களும் சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் அளிக்கப்போகிறார். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த ராஜயோகத்தால் அவர்கள் திடீர் நிதி ஆதாயங்களையும், பெரிய லாபத்தையும் எதிர்பார்க்கலாம். இந்த சுப யோகத்தால் அவர்களின் பேச்சு மற்றும் தொடர்பு மேம்படும். அவர்கள் வாழ்க்கையில் மகத்தான முன்னேற்றத்தை அடைவார்கள், மேலும் அவர்களின் முயற்சிகள் வேலையில் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். மேலும் அவர்கள் வேலையில் புதிய திட்டங்கள் மற்றும் பொறுப்புகளைப் பெறலாம்.
இந்த ராஜயோகத்தால் வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கஜகேசரி ராஜயோகம் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் மிகப்பெரிய நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்கள் வேலையில் தங்களின் செயல்திறனால் பெரிய விஷயங்களை சாதிக்கலாம், மேலும் அவர்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் தேடிவரும். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகளில் இருந்து அவர்கள் விடுபடலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.
குருபகவானின் அருளால், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். அவர்களின் வாழ்க்கையில் புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும், இது அவர்களின் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை அதிகரிக்கும். கடக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், மேலும் இந்த காலகட்டம் முழுவதும் வாழ்க்கையில் உற்சாகம் நிறைந்திருக்கும்.
விருச்சிகம்
கஜகேசரி ராஜயோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் புதிய வருமான ஆதாரங்கள் தோன்றுவதால் லாபம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் மற்றும் அவர்களின் பொருளாதார நிலையை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு, இந்த யோகம் அவர்கள் எடுத்த முயற்சியில் வெற்றியைக் கொடுக்கும்.
அவர்களின் நீண்ட கால இலட்சியங்கள் இப்போது நிறைவேறலாம். நிதிநிலை வலுவடைவதால் அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கான கனவு நிறைவேறும். இந்த காலம் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் சிறந்த பலன்களை அளிக்கும். மொத்தத்தில் இந்த ராஜயோகம் அவர்களின் தலைவிதியை மாற்றுவதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

