Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
February 2026 Lucky Zodiac Signs: பிப்ரவரியில் இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
February 2026 Lucky Zodiac Signs: ஜோதிடத்தின் படி 2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் கிரகங்களின் நிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த மாதத்தில் பல கிரகங்கள் சனி பகவானின் கும்ப ராசியில் பயணிக்கப் போகின்றன. அதுவும் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் போன்ற கிரகங்கள் கும்ப ராசியில் இருப்பதால், பல்வேறு ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் புதன் சுக்கிரனால் லட்சுமி நாராயண ராஜயோகமும், அதன் பின் மாதத்தின் நடுப்பகுதியில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் கும்ப ராசியில் நுழைவதால் ஏற்கனவே கும்பத்தில் இருக்கும் புதனுடன் சேர்த்து புதாதித்ய ராஜயோகத்தையும், சுக்கிரனுடன் சேர்த்து சுக்ராதித்ய ராஜயோகத்தையும் உருவாக்கவுள்ளார்.

பின் மாத இறுதியில் செவ்வாயுடன் சூரியன் சேர்த்து மங்களாதித்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இப்படி ஏராளமான ராஜயோகங்கள் உருவாவதனால், பிப்ரவரி மாதத்தில் 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறவுள்ளனர். இப்போது 2026 பிப்ரவரி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது மிகவும் அற்புதமான மாதமாக இருக்கும். ஏனெனில் இம்மாதத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இதன் விளைவாக இலக்குகளை அடைந்து, உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். மேலும் பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் நல்ல மாதமாக இருக்கும். அதிர்ஷ்ட வீட்டில் பல ராஜயோகங்கள் உருவாவதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் முடிவுகள் சாதகமாக வரும். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும் மற்றும் அவரால் பல நன்மைகளைப் பெறுவீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். காதல் வாழ்க்கையில் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு இம்மாதம் லாபகரமானதாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இம்மாதம் நன்மை பயக்கும் மாதமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மிகவும் நல்ல மாதமாக இருக்கும். முக்கியமாக இம்மாதத்தில் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நிதி நிலைமை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் வெற்றிகள் குவியும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வேலை செய்பவர்கள் சம்பள உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இம்மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ராஜதந்திர திறன்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
