Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
இந்த 5 ராசிக்காரங்க உலகின் மிகச்சிறந்த அப்பாக்களாக இருப்பார்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
Fathers Day 2025: ஜோதிடத்தைக் கொண்டு ஒருவரது ஆளுமை பண்புகள், உறவு விஷயங்களில் எப்படி இருப்பார்கள் மற்றும் பொறுப்புக்களில் எப்படி நடந்து கொள்வார்கள் போன்ற பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அதுவும் பெற்றோர் என்று வரும் போது சில ராசிக்காரர்கள் குழந்தைகளை வளர்ப்பதில், பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் சிறந்தவர்களாக, குடும்பத்திற்கு சிறந்த ஆதரவு அளிப்பவர்களாக இருப்பார்கள்.
அதுவும் தந்தை என்று வரும் போது சில ராசிக்காரர்கள் உலகிலேயே மிகச்சிறந்த தந்தைகளாக கருதப்படுகிறார்கள். இப்போது எந்த ராசிக்காரர்கள் உலகிலேயே மிகவும் சிறந்த தந்தைகளாக இருப்பார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசி அல்லது உங்கள் தந்தையின் ராசி இதில் உள்ளதா என்று பாருங்கள்.

கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள், மிகவும் சென்சிடிவ்வானவர்கள் மற்றும் சிறந்த பாதுகாவலர்கள். இயற்கையாகவே இந்த ராசி ஆண்கள் அதிக அக்கறை கொண்டவர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளுடன் வலுவான உணர்ச்சி பிணைப்பை உருவாக்குவார்கள். முக்கியமாக கடக ராசிக்காரர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பார்கள். இந்த ராசியைச் சேர்ந்த தந்தைமார்கள் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாகவும், அன்பாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஆதரிக்கப்படுவதாக உணர வைப்பார்கள்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசியைச் சேர்ந்த அப்பாக்கள் பொறுப்பானவர்கள், ஒழுக்கமானவர்கள் மற்றும் பெரும்பாலும் கண்டிப்பானவர்கள். ஆனால் இவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி அதிக அக்கறையை கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதிப்புகளை கற்பிப்பதிலும், அவர்களின் இலக்குகளை அடைய ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள். தங்கள் குடும்பங்களுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்க கடினமாக உழைப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்கார அப்பாக்கள் அன்பான உள்ளம் கொண்டவர்கள், பெருமைமிக்கவர்கள். தங்கள் குழந்தைகளுடன் நல்ல தரமான நேரத்தை செலவிட அதிகம் விரும்புவார்கள். மேலும் தனது குழந்தைகளை சிறப்புற உணர வைக்க பெரும்பாலும் முயற்சி செய்வார்கள். சிம்ம ராசிக்கார தந்தைமார்கள் தங்கள் விளையாட்டுத்தனமான இயல்பு மற்றும் தலைமைத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகள் வளர்வதைப் பார்த்து மகிழ்வார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்கார தந்தைமார்கள் நம்பகமானவர்கள் மற்றும் நிலையானவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிலையான மற்றும் வசதியான வாழ்க்கையை வழங்குவார்கள். எப்போதும் பொறுமையாகவும், மென்மையாகவும் இருப்பார்கள். பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்கு கடின உழைப்பு, நேர்மை மற்றும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை கற்பிப்பார்கள். அவர்களின் அமைதியான இயல்பு குடும்ப சவால்களை அமைதியாக நிர்வகிக்கவும் உதவுகிறது.
மீனம்
மீன ராசியின் அதிபதி குருபகவான். இந்த ராசியைச் சேர்ந்த அப்பாக்கள் கனிவானவர்கள், கற்பனைத்திறன் மிக்கவர்கள் மற்றும் உணர்ச்சி ரீதியாக இணைக்கப்பட்டவர்கள். தங்கள் குழந்தைகளின் கருத்துக்களை காது கொடுத்து கேட்பார்கள். பெரும்பாலும் படைப்பாற்றல் மற்றும் கனவுகளை ஊக்குவிப்பார்கள். மேலும் தங்கள் குழந்தைகள் அன்பான சூழலில் வளர அனுமதிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
