Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
30 ஆண்டுகளுக்கு பின் தசரா நாளில் உருவாகும் 2 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது..
Dussehra 2024: இந்து நாட்காட்டியின் படி, 2024 ஆம் ஆண்டின் தசரா பண்டிகை வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டின் தசரா பண்டிகையானது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் மிகப்பெரிய ராஜயோகங்கள் உருவாகவுள்ளன.
அதில் சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருப்பதால் சச ராஜயோகமும், சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் இருப்பதால் மாளவ்ய ராஜயோகமும் உருவாகவுள்ளன.

இந்த இரண்டு மங்களகரமான ராஜயோகங்களும் தசரா நாளில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளன. இந்த இரண்டு ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
முக்கியமாக இந்த ராஜயோகங்கள் ஒருவரது நிதி நிலை, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தவுள்ளன. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகமானது மிகவும் அற்புதமாக இருக்கும். ஏனெனில் சனி பகவான் 2 ஆவது வீட்டிலும், சுக்கிரன் 10 ஆவது வீட்டிலும் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகமானது சிறப்பான பலன்களை அளிக்கும். ஏனெனில் சனி பகவான் 5 ஆவது வீட்டிலும், சுக்கிரன் முதல் வீட்டிலும் உள்ளனர். இதனால் குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஆளுமை மேம்படும். நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். கடனில் இருந்து விடுபடுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு அற்புதமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகமானது சாதகமான பலன்களை வழங்கும். ஏனெனில் சனி பகவான் 10 ஆவது வீட்டிலும், சுக்கிரன் 6 ஆவது வீட்டிலும் உள்ளனர். இதனால் நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். இதனால் எடுக்கும் வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருப்பதால், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications