Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
சுக்கிரன் டிசம்பரில் இரண்டு முறை பெயர்ச்சி அடைவதால் 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்...!
ஜோதிடத்தின் படி சில அரிதான சந்தர்ப்பங்களில் கிரகங்கள் ஒரே மாதத்தில் இரண்டு முறை பெயர்ச்சி அடைகின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் காணப்படும். அழகு, காதல், செல்வம் போன்றவற்றின் அதிபதியாக இருக்கும் சுக்கிரன் டிசம்பரில் இரண்டு முறை தனது ராசியை மாற்றப் போகிறார்.
சுக்கிரன் டிசம்பர் 2-ம் தேதி மகர ராசியிலும், டிசம்பர் 28-ம் தேதி கும்ப ராசியிலும் நுழைகிறார். சுக்கிரனின் இந்த இரட்டைப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் அற்புதமான காலகட்டம் வரவிருக்கிறது. இந்த காலகட்டத்தில் எதிர்பாராத நிதி ஆதாயமும், வாழ்வில் அதிர்ஷ்டமும் கிடைக்கும். இந்த அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி காலம் மிகவும் சாதகமாக இருக்கும். ஏனெனில் சுக்கிரன் இந்த ராசிக்கு 10ம் வீட்டிலும், அதிர்ஷ்ட வீட்டிலும் சஞ்சரிக்கிறார். எனவே இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் இருக்கும். வேலையில்லாத ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த இரட்டை சுக்கிர பெயர்ச்சியால் நல்ல வேலை கிடைக்கும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயணம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கலாம். கடந்த கால முதலீடுகளால் லாபம் கிடைக்கும். வியாபாரத்த்தில் இருப்பவர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய லாபம் வந்து சேரும். புதிதாக கிடைக்கும் ஒப்பந்தங்கள் உங்களின் நிதிநிலையையும், சேமிப்பையும் உயர்த்தும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். ஏனெனில் இதில் ஒருமுறை சுக்கிரன் மகர லக்னத்திலும், இரண்டாவது முறை தனபாவத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த இரண்டு சஞ்சாரமும் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பானப் பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.
திருமணமான மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். நிதி நிலையும் வெகுவாக மேம்படும். வேலையில் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் வெகுமதி கிடைக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்பார்க்காத நிதி ஆதாயம் கிடைக்கும். சிங்கிளாக இருப்பவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனின் இரட்டைப் பெயர்ச்சியின் மூலம் வாழ்க்கையில் சீரான முன்னேற்றத்தை அனுபவிப்பார்கள். ஏனெனில் சுக்கிரன் கும்ப ராசியின் அதிர்ஷ்ட வீடுகளில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த காலத்தில் வேலையில் பல சாதனைகளை செய்யலாம். கடன் கொடுத்த பணம் இந்த நேரத்தில் திருப்பித் தரப்படும்.
புதிய விஷயங்களைத் தொடங்க அல்லது புதிய தொழில் தொடங்க இது சிறந்த நேரம். மேலும் உங்களின் உரையாடல் மிகவும் வசீகரமானதாக இருக்கும். அவர்களின் ஆளுமையாலும், பேச்சாற்றலாலும் அனைவரும் இவர்களிடம் மயங்குவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பெரிய உங்களின் பொருளாதார நிலை மேம்படும். சேமிப்பு வெகுவாக உயரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
