Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
மகர ராசியில் உருவாகியுள்ள இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Double Rajyogas In Capricorn 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். இந்நிலையில் செவ்வாய் ஜனவரி 16 ஆம் தேதி தனது உச்ச ராசியான மகர ராசிக்குள் நுழைந்தார்.
இந்த மகர ராசியில் ஏற்கனவே சூரியனும், சுக்கிரனும் உள்ளனர். செவ்வாயும் இந்த ராசிக்குள் நுழைவதால், மகர ராசியில் திரிகிரக யோகம் உருவாகிறது. ஜோதிடத்தில் திரிகிரக யோகமானது மிகவும் மங்களகரமான யோகங்களுள் ஒன்றாகும். மேலும் செவ்வாய் தனது உச்ச ராசியில் இருப்பதால், ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது.

இப்படி மகர ராசியில் ஒரே வேளையில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகியிருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த சிறப்பான நிகழ்வினால் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது மகர ராசியில் உருவாகும் இரட்டை ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் இரட்டை ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணியிடத்தில் நற்பெயர் அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மொத்தத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் இரட்டை ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் இரட்டை ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். படைப்புத்திறனால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திறமைகள் அங்கீகரிக்கப்படும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் இரட்டை ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும், வீரமும் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஊடகம், ஐடி, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் இரட்டை ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கையும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நீதியாக நல்ல உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்து, அதை தொடங்கினால் அதில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். முக்கியமாக பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும் மற்றும் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications