Latest Updates
-
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
50 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் உருவாகியுள்ள இரட்டை ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்!
Double Rajyog Made In Pisces After 50 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதோடு நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, ராஜயோங்களையும் உருவாக்கி சிறப்பான தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் மீன ராசியில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
அதில் சுக்கிரன் மற்றும் புதன் மீன ராசியில் ஒன்றிணைந்து லட்சுமி நாராயண ராஜயோகத்தையும், சுக்கிரன் மீன ராசியில் இருப்பதால் மாளவ்ய ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளன. இவ்விரு ராஜயோகங்களும் ஒரே வேளையில் மீன ராசியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

அதுவும் சில ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து, திடீர் நிதி ஆதாயங்களுடன், முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் குரு பகவானின் மீன ராசியில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண மற்றும் மாளவ்ய ராஜயோகமானது உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் தேடி வரும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண மற்றும் மாளவ்ய ராஜயோகமானது உருவாகியுள்ளது. இதனால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள். வசதிகள் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சிறப்பான பலனைத் தரும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. பெற்றோருடனான உறவு வலுவாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண மற்றும் மாளவ்ய ராஜயோகமானது உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பை காண்பீர்கள். வணிகர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அது நிறைவேறும். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மன ரீதியாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications