Latest Updates
-
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்
இந்த செடிகளை யாருக்கும் பரிசாக கொடுக்கக் கூடாதாம் ஏன் தெரியுமா?
தற்போதைய சமூகத்தில் திருமண விழாவில், பிறந்தநாள் விழாவில், என நடக்கும் அனைத்து விழாக்களிலும் செடிகளை பரிசாக கொடுப்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது.. செடிகளை பரிசளிப்பது நல்ல விஷம்தான் என்றாலும் எந்த செடியை கொடுக்க வேண்டும் என்று ஒரு ஐதீகம் உள்ளது.. போதுவாகவே பரிசளிக்க துளசி செடி சிறந்தது. பலர் சந்தைக்கு சென்று எந்த செடி அழகாக இருந்தாலும் அதை வாங்கி தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசாக கொடுப்பார்கள்.. ஆனால் இதைச் செய்வது மிகவும் தவறானது.
இதனால் உங்களுடைய உறவு பிரச்சனையாகும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளார். யாருக்காவது ஒரு செடியை பரிசாக கொடுக்க நினைத்தால் மணி பிளாண்ட் அல்லது ஷோ பிளாண்ட் கொடுக்கலாம். இது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

மேலும், இந்த தாவரத்தை பரிசாக வழங்குவது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பரிசாக கொடுப்பவருக்கும் சரி பரிசை பெருபவரும் சரி அதிகமான நேர்மறையான ஆற்றலை பெருவார்களாம்.. அதுமட்டுமின்றி வெள்ளை நிற பூக்கள் கொண்ட செடிகளும் மிகவும் புனிதமாக கருதப்படுகின்றன. அது உங்கள் பந்தத்தை வலுப்படுத்தும் என்றும், உங்கள் அன்பை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது..
இதில் குறிப்பாக முள் செடியை யாருக்கும் பரிசாக கொடுக்க கூடாது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.. அதில் மிக முக்கியமாக ரோஜா அல்லது கற்றாழை போன்ற செடிகளை கொடுக்கவே கூடாது. இவற்றுடன் பலாச் செடியைக் கொடுக்கக் கூடாது. இவற்றை கொடுப்பதால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படும். அதுமட்டுமின்றி இந்த செடிகளை கொடுப்பது அசுபமானது என்று ஜோதிட அறிஞர்கள் கூறுகின்றனர். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் செழிப்பு உங்களுக்கு மிக முக்கியமானால்.. அவர்களுக்கு துளசி செடியை பரிசாக கொடுப்பது சிரந்தது... காரணம் லட்சுமி தேவி துளசியில் வசிப்பதாக கூறப்படுகிறது. அதனால் அந்த செடியை அன்பளிப்பாகக் கொடுத்தால், இருவருக்குள்ளும் பந்தமும் இனிமையும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை..
மேலும் துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். துளசியில் சாதாரணமாக காணப்படுவது வெண் துளசியாகும். இது தவிர கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள் துளசி, கற்பூர துளசி என அதிக துளசி வகைகள் உள்ளன. நாம் நினைப்பதுப் போல துளசி நோய் நிவாரணி மட்டுமல்ல. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது.
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் சாப்பிட்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். அதனால் ஒருவருக்கு அன்பளிப்பாக கொடுக்க துளசி செடி மிக சிறந்ததாக கருதப்படுகிறது.. ஆனால் மறந்தும் கூட முட்கள் உள்ள செடி வகைகளை கொடுத்து விடாதீர்கள்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
