Latest Updates
-
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்! -
கேது கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா -
மணமணக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி - எப்படி செய்யணும் தெரியுமா? -
சங்கரா மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
3 ஸ்பூன் வேர்க்கடலை இருந்தா பீர்க்கங்காயோட சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும -
ஹிமாலயன் வயகரா என்று அழைக்கப்படும் இந்த காளானின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்... -
சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 2 நாட்கள் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் பணக்கஷ்டத்தில் சிக்கி சிரமப்பட போகிறார்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
அக்டோபர் மாதம் தொடங்கும்போது, பல கிரக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் சில ராஜயோகங்கள் உருவாகின்றன, அந்த வகையில் சக்திவாய்ந்த சதுர்கிரக யோகம் உருவாகப்போகிறது. செவ்வாய், புதன், சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய நான்கு கிரகங்களும் துலாம் ராசியில் ஒன்றாக வரும்போது, அது சக்திவாய்ந்த சதுர்கிரக யோகத்தை உருவாக்குகிறது. சதுர்கிரக யோகம் சில ராசிக்காரர்களுக்கு மகத்தான அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது. இருப்பினும், சில ராசிகள் சதுர்கிரக யோகத்தால் மோசமான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள்.
சதுர்கிரக யோகத்தால், சில ராசிக்காரர்கள் பல்வேறு வகையான நெருக்கடிகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். அவர்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து நெருக்கடிகளையும் ஒன்றாக அனுபவிக்கும் நேரமாக அக்டோபர் மாதம் இருக்கும். இந்த பதிவில் சதுர்கிரக யோகத்தால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு, சதுர்கிரக யோகம் பல்வேறு மோசமான பலன்களை அளிக்கப் போகிறது. அவர்கள் பெரும்பாலும் கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் அவர்களை எந்த வகையிலும் ஆதரிக்காது. அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன்களை அடைய முடியாது.
அவர்களின் பணக்கஷ்டம் இப்போது மிகவும் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த அவர்களின் கவலைகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பாதகமான சூழல் நிலவுவதால் பணிச்சுமை அதிகரிக்கும் மேலும் மனஅழுத்தம் அதிகரிக்கும். இந்த மாதம் அவர்கள் அதிகம் கடன் வாங்க வேண்டியிருக்கும். திருமணமான தம்பதிகள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
சதுர்கிரக யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான பலன்களை வழங்கப்போகிறது. இது அவர்களின் பணக்கஷ்டத்தை இரட்டிப்பாக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம், மேலும் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் சில பதட்டமான சூழல் நிலவலாம், சொத்து தொடர்பாக குடும்பத்திற்குள் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
தனிப்பட்ட உறவுகளில் சில சிக்கல்கள் ஏற்படலாம், இழப்புகள், நம்பிக்கை துரோகங்கள் மற்றும் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகிச் செல்வது போன்றவற்றால் கவலைகள் அதிகரிக்கலாம். மொத்தத்தில் சதுர்கிரக யோகத்தால் இந்த மாதம் மிகவும் சவாலான மற்றும் கடினமான மாதமாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின், எட்டாவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இது அவர்களுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த யோகத்தால் வேலையில் இருப்பவர்கள் தங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளால் அவர்கள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.
திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் பயணங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை விபத்துக்கள் அல்லது இழப்புகளை ஏற்படுத்தும். வேலையில்லாதவர்கள் இந்த காலகட்டத்தில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

