Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
1 வருடத்திற்கு பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Budhaditya Rajyog In Aries 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் தற்போது சூரியன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் வருகிற மே 07 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.

மேஷ ராசியில் புதன் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே சூரியன் பயணித்து வருவதால், மேஷ ராசியில் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகம் மேஷ ராசியில் சுமார் 1 வருடத்திற்கு பின் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது மேஷ ராசியில் உருவாகவுள்ள புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வீடு, வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுடன் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை அனுபவிக்கக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் துணையுடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
