Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
பாபா வாங்கா கணிப்புப்படி, 2026 இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Baba Vanga 2026 Predictions: சமீப காலமாக உலகில் எந்த ஒரு நிகழ்வுகள் நடந்தாலும், முதலில் பாபா வாங்காவின் கணிப்புகளைத் தான் சரிபார்க்கிறோம். ஏனெனில் பாபா வாங்காவின் பல கணிப்புகள் உண்மையாக நிகழ்ந்து வருகின்றன. இதனால் இவர் உலகளவில் மிகவும் பிரபலமான தீர்க்கத்தரசியாக உள்ளார். ஒவ்வொரு ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிற்கான அவரது கணிப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும்.
அந்த வகையில் இன்னும் 2 மாதங்களில் 2026 என்னும் புதிய ஆண்டில் நுழையவுள்ளோம். பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அதுவும் அந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகளை குவிக்கப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த 2026 ஆம் ஆண்டு உலகில் மிக முக்கியமான மாற்றங்களை கொண்டு வரப்போகிறது. இயற்கை பேரழிவுகள், மூன்றாம் உலகப்போர், பொருளாதார நெருக்கடிகள் போன்ற பல இந்த 2026 ஆம் ஆண்டில் நிகழவுள்ளன என்று பாபா வாங்காவின் கணிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்போது 2026 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானது என்று பாபா வாங்கா கூறுகிறார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் பல மாற்றங்களைக் காண்பார்கள். இந்த ஆண்டில் பல புதிய விஷயங்களை செய்வீர்கள். புதிய தொடக்கங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறலாம். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்புக்கள் நிச்சயம் கிடைக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் பல மாற்றங்களைக் காண்பார்கள். ஆனால் எப்போதும் அவசரமாக எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் தங்களின் கடின உழைப்புக்கான பலனை நிச்சயம் பெறுவார்கள். இதுவரை வேலையில் பல சிரமங்களை, தோல்விகளை சந்தித்து வந்தால், இந்த ஆண்டில் வெற்றிகளை குவிப்பீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். ஆனால் செலவுகளை சற்று கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பல பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும்.
மிதுனம்
பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, மிதுன ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த ஆண்டில் பணிபுரிபவர்கள் புதிய பொறுப்புக்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்யும் எண்ணம் இருந்தால், இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகம் செய்யும் எண்ணம் இருந்தால், இந்த ஆண்டு அதற்கு சாதகமாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் புதன்கிழமைகளில் செய்வது நல்லது. ஏனெனில் 2026-ல் புதன்கிழமை அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
சிம்மம்
பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, சிம்ம ராசிக்காரர்களுக்கும் 2026 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமான ஆண்டாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டில் நிதி நிலையில் பெருமளவில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய வணிகம் செய்யும் எண்ணம் இருந்தால், இந்த ஆண்டில் தொடங்கினால் கொடிகட்டிப் பறக்கலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டில் சூரியனின் பரிபூர்ண ஆசி எப்போதும் இருக்கும். சிலருக்கு கோடீஸ்வரராகும் பாக்கியமும் கிடைக்கலாம்.
கும்பம்
பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, 2026 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காண்பார்கள். அந்த மாற்றங்கள் அனைத்தும் மகிழ்ச்சியானவையே ஆகும். நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றியும், பணமும் குவியும். ஆனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, ஓய்வு மற்றும் தூக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications