Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
ஆகஸ்ட் மாதம் இந்த 5 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..
August 2025 Monthly Finance And Career Horoscope In Tamil: ஆகஸ்ட் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஆகஸ்ட் மாத கிரகங்களின் நிலைகளால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கலாம்.
முக்கியமாக இந்த ஆகஸ்ட் மாதத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் நிதி நிலையில் மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். அதே வேளையில் சில ராசிக்காரர்கள் பண பிரச்சனையாலும், பணியிடத்தில் வேலைப்பளு மற்றும் இலக்குகளை அடைய முடியாமல் அவதிப்படவும் வாய்ப்புள்ளது. இப்போது 2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 12 ராசிக்காரர்களின் நிதி நிலையும், தொழில் வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் நிதி ரீதியாக நிலையற்றதாக இருக்கும். பணியிடத்தில் சூழல் மிகவும் பதற்றமாக இருக்கும். இந்த மாதத்தில் புதன் வக்ரமாக இருப்பதால், உணர்ச்சிவசப்பட்டு அவசரமாக எந்த முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளை செய்ய ஆசைகள் எழும். ஆனால் அப்படி செய்தால், பின் வருத்தப்பட வேண்டியிருக்கும். மாத தொடக்கத்தில் சுக்கிரன் மிதுனத்தில் இருப்பதால், வேலையில் சில நல்ல பலன்களைப் பெறலாம். ஆனால் இம்மாதத்தில் கடக ராசிக்கு சென்ற பின், வீட்டிற்காக கொஞ்சம் செலவிடுவீர்கள். மேலும் செவ்வாய் கன்னி ராசிக்கு செல்வதால் பட்ஜெட் போட்டு செலவுகளை செய்வீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரனின் நிலையால் பொழுதுபோக்கிற்காக நிறைய செலவுகளை செய்ய ஆசை எழும். புதன் வக்ரமாக இருப்பதால், ஆகஸ்ட் 11 வரை தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆகஸ்ட் 21 முதல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால், நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். வீட்டிற்காக நிறைய செலவுகளை செய்வீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு முதலீடுகளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மொத்தத்தில் அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். பெரிய முதலீடுகள் அல்லது நிதி தொடர்பான பேச்சு வார்த்தைகளை ஒத்தி வைக்க வேண்டும். பணியிடத்தில் கடினமாக உழைத்தால், அதற்கான பலன் கிடைக்கும். இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். வணிகர்கள் பயணங்களால் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசிக்கார்களே! ஆகஸ்ட் மாதத்தில் வணிகர்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில் இருக்கும். ஆனால் பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் மோசமாக இருக்கும். இந்த மாதத்தில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலையில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இம்மாதத்தில் செலவுகள் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிதி நிலையில் கூட நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இம்மாதத்தில் கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால், நல்ல உயர் நிலையை அடையலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் தொழிலில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியாது. பணியிடத்தில் வேலைப்பளு அல்லது நெருக்கடிகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் எந்த ஒரு நிதி தொடர்பான விஷயங்களில் கையெழுத்திடுவதற்கு முன் நன்கு படிக்க வேண்டும். அவசரப்பட்டு எதிலும் கையெழுத்திடாதீர்கள். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் எதிர்பாராத அளவில் நல்ல பலன்களைத் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெற்றிகளைக் குவிப்பீர்கள். உங்களின் ஒவ்வொரு திட்டங்களும் வெற்றிகரமாக முடிவடையும். ஆனால் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் இம்மாதத்தில் திடீர் செலவுகள் ஏற்படும். இதனால் நிதி நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும். எனவே இம்மாதத்தில் பண விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். நிதி ரீதியாக இம்மாதம் சாதகமாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். ஆனால் இம்மாதத்தில் பயணங்களை மேற்கொள்வதைத் தள்ளிப் போடுவது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். இருந்தாலும் எதிர்பார்த்த விஷயங்கள் உடனே நடக்காமல் தாமதமாகலாம். பணியிடத்தில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆனால் நிதி விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். யோசிக்காமல் எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது தொழில் ரீதியாக கலவையாக இருக்கும். புதிய சிந்தனை மற்றும் புத்திசாலித்தனத்தால் தொழிலில் முன்னேற்றத்தைக் காணலாம். இருந்தாலும், இம்மாதத்தில் அமைதியையும், பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். மேலும் திடீர் செலவுகளையும் சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் பணியிடத்தில் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புக்களைப் பெறக்கூடும். சில காரணங்களால் நிறைய பணத்தை செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படும். வணிகர்கள் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் பெரிய அளவில் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











