Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது..
உங்க அதிர்ஷ்டம் உங்களோட எந்த வயதில் பிரகாசிக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா?
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் தான் ஒருவரது வெற்றி, தோல்வியில் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதுவும் ஒவ்வொரு கிரகமும் எந்த வீட்டில் உள்ளதோ அல்லது கிரகங்களின் பார்வை எந்த வீட்டை அல்லது கிரகத்தைப் பார்த்து உள்ளதோ, அதைப் பொறுத்து தான் ஒருவருக்கு நடக்கவிருக்கும் நல்லது, கெட்டது உள்ளது.
நீங்கள் எவ்வளவு உழைத்தாலும், உங்களின் எடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லையா? நீங்கள் மிகவும் துரதிர்ஷ்டசாலியாக உணர்கிறீர்களா? எப்போது உங்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

அப்படியானால் உங்கள் ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் இருக்கும் வீட்டைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். ஜோதிடத்தில் உள்ள 12 வீடுகளில் 9 ஆவது வீடு தான் அதிர்ஷ்ட வீடு. எனவே, ஒன்பதாம் வீட்டில் இருக்கும் கிரகங்கள் மற்றும் இந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் ஒரு நபரின் அதிர்ஷ்டத்தின் நேரம் மற்றும் காலத்தைப் பற்றி கூறும்.
ஜோதிடத்தின்படி, ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டின் அதிபதி இருக்கும் வீட்டைப் பார்த்த பிறகுதான் அந்த நபரின் தலைவிதி பாதிக்கப்படும். அதே சமயம், ஒன்பதாவது வீட்டில் இருக்கும் கிரகங்கள் ஒருவரது செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பாகும். இப்போது இந்த 9 ஆவது வீட்டில் எந்த கிரகங்கள் இருந்தால், எந்த வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதைக் காண்போம்.
9 ஆவது வீட்டில் குரு
குரு பகவான் 9 மற்றும் 10 ஆவது வீடுகளின் அதிபதி. இந்நிலையில் ஒருவரது ஜாதகத்தில் இந்த குரு 9 ஆவது வீட்டில் இருந்தால், அந்நபரின் அதிர்ஷ்டம் 16 ஆவது வயதில் இருந்தே பிரகாசிக்கும். இதன் மூலம் சமூகத்தில் செல்வம், செழிப்பு மற்றும் மரியாதை போன்றவை கிடைக்கும்.
9 ஆவது வீட்டில் சூரியன்
ஒருவரது ஜாதகத்தில் சூரியன் 9 ஆவது வீட்டில் இருந்தால், அந்நபரின் அதிர்ஷ்டம் 22 வயதில் பிரகாசிக்கும். இதன் மூலம் அரசியலில் இருந்தால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
9 ஆவது வீட்டில் சந்திரன்
ஒருவரது ஜாதகத்தில் 9 ஆவது வீட்டில் சந்திரன் இருந்தால், அந்நபருக்கு அதிர்ஷ்டம் 24 வயதில் பிரகாசிக்கும். சந்திரனின் இந்நிலையால் அந்நபர் பிறந்த இடத்தை விட்டு ஒரு தொழிலை செய்து அதில் பெரிய வெற்றி பெறுவர்.
9 ஆவது வீட்டில் சுக்கிரன்
சுக்கிரன் ஒரு சுப கிரகமாகும். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் 9 ஆவது வீட்டில் இருந்தால், அந்நபரின் அதிர்ஷ்டம் 25 வயதில் பிரகாசிக்கும். அதுவும் அப்போது அந்நபருக்கு இலக்கியம் மற்றம் கலைகளில் ஆர்வம் அதிகரித்து, அதன் மூலம் வெற்றி பெறுவார்கள். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
9 ஆவது வீட்டில் செவ்வாய்
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் 9 ஆவது வீட்டில் இருந்தால், அந்நபர் நல்ல வெற்றியைப் பெறுவார். மேலும் அந்நபரின் அதிர்ஷ்டம் 28 வயதில் பிரகாசிக்கும். சொத்து, நிலம் போன்றவற்றால் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலில் நிறைய லாபத்தைப் பெறக்கூடும்.
9 ஆவது வீட்டில் புதன்
ஒருவரது ஜாதகத்தில் 9 ஆவது வீட்டில் புதன் இருந்தால், அந்நபரின் அதிர்ஷ்டம் 32 வயதில் பிரகாசிக்கும். மேலும் அந்நபர் உயர் கல்வி மற்றும் கற்பனை மற்றும் நல்ல எழுத்தாளர்களாக இருப்பர். மேலும் ஜோதிடம், கணிதம், கல்வி, சுற்றுலா போன்ற துறைகளிலும் நல்ல பணமும் புகழும் பெறுவார்கள்.
9 ஆவது வீட்டில் சனி
ஒருவரது ஜாதகத்தில் 9 ஆவது வீட்டில் சனி இருந்தால், வழக்கத்தை விட மந்தமான வேகத்தில் அந்நபரின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அதுவும் அந்த அதிர்ஷ்டம் 36 வயதில் தான் பிரகாசிக்கும். அதாவது வாழ்க்கையின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருக்கும். வெற்றிகள் குவியும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், செல்வத்தையும் பெற முடியும்.
9 ஆவது வீட்டில் ராகு-கேது
ஒருவரது ஜாதகத்தில் 9 ஆவது வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால், அந்நபரின் அதிர்ஷ்டம் 42 வயதில் பிரகாசிக்கும். இதன் மூலம் நிதி நிலைமை நன்கு மேம்படும். வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். வெற்றிகள் குவியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications