Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
ஐப்பசி பௌர்ணமி இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கும் குதிரையாக மாற்றப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த அரிய நிகழ்வு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக இந்த பௌர்ணமி அனைத்து ராசிக்காரர்களுக்கும் நேர்மறையான பலன்களை அளிக்கும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது.
இந்த ஆண்டு ஐப்பசி பௌர்ணமி நவம்பர் 5 ஆம் தேதி வருகிறது. இந்த நல்ல நாளில், நீங்கள் குறிப்பாக விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியை வழிபட வேண்டும். இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தைத் தருகிறது. இந்த வருடம் ஐப்பசி பௌர்ணமி அன்று, சிவவாச யோகமும், சர்வார்த்த சித்தி யோகமும் வருகிறது. இந்த பதிவில் ஐப்பசி பௌர்ணமியால் மகத்தான அதிர்ஷ்டத்தை அடையப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஐப்பசி பௌர்ணமி சிறப்பான மாற்றங்களை அளிக்கப்போகிறது. இது லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் அதிகரிக்கும் நாளாகும். இது அவர்களின் வேலையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும், திருமணமாணவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
இந்த காலகட்டம் மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும், மாணவர்கள் தேர்வுகளில் பெரிய வெற்றியைப் பெற முடியும். அவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியும். சொத்துக்களில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். ஆரோக்கியம் அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஐப்பசி பௌர்ணமியால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடைவார்கள். மேலும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். அவர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். அவர்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் இப்போது முடிவுக்கு வரும்.
திருமணமான தம்பதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.
கன்னி
ஐப்பசி பௌர்ணமி கன்னி ராசிக்காரர்களுக்கு மகத்தான அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது. லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் அவர்களுக்கு முழுமையாக இருக்கும். அவர்கள் மேலதிகாரிகளுடன் நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்ளலாம், அது எதிர்காலத்தில் அவர்களுக்கு பயனளிக்கும். அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக மாறும், மேலும் இந்த காலத்தில் அவர்களின் ஒற்றுமையும், புரிந்துணர்வும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் இந்த காலகட்டத்தில் பொருத்தமான திருமண வரன்களைப் பெறலாம். பல்வேறு துறைகளில் உள்ள அவர்கள் உறவினர்களின் ஆதரவை எதிர்பார்க்கலாம், மேலும் பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த புனித நாளால் அவர்களின் ஆரோக்கியம் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
