Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சூரிய பெயர்ச்சியால் பிறக்கும் ஐப்பசி மாதம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Aippasi Month Rasipalan 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். மேலும் சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் தற்போது சூரியன் கன்னி ராசியில் உள்ளார். இதனால் புரட்டாசி மாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சூரியன் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி சுக்கிரனின் ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். துலாம் ராசியில் சூரியன் நுழைவதால் ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியனின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதுவும் 3 ராசிக்காரர்கள் சூரியனின் அருளால் ஏராளமான நன்மைகளைப் பெறவுள்ளனர்.

முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து, எதிரிகளை வீழ்த்தி வெற்றிகளை குவிப்பதோடு, பண மழையிலும் நனையவுள்ளனர். அதோடு நீண்ட நாள் ஆசைகளும் நிறைவேறப் போகிறது. இப்போது சூரிய பெயர்ச்சியால் பிறக்கும் ஐப்பசி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஐப்பசி மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறுவார்கள். ஒவ்வொரு வேலையையும் வெற்றிகரமாக முடிப்பார்கள். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுவார்கள். நீண்ட காலமாக நடந்து வந்த நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மொத்தத்தில் ஐப்பசி மாதம் நல்ல வெற்றியைத் தரும் மாதமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஐப்பசி மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களின் பலத்தை கண்டறிவார்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். பேச்சில் மட்டும் சற்று கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். ஊடகம், எழுத்து, தகவல் தொடர்பு போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல ஆதாயங்களைத் தரும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஐப்பசி மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டுவதோடு, பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. சிலருக்கு சம்பளத்தில் உயர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
