Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
ஆடி மாதத்தில் சிம்மம் உள்ளிட்ட 5 ராசிக்காரங்க பணத்தை அள்ளப்போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
Aadi Month Rasi Palan 2025 Lucky Zodiac Signs: ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ராசியை மாற்றும். அவ்வாறு கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் தான் சூரியன்.
இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அவ்வாறு மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அதில் சூரியன் கடக ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதமான ஆடி மாதம் பிறக்கின்றன. இந்த ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதி பிறக்கப் போகிறது. இந்த ஆடி மாதத்தில் சூரியன் சில நாட்கள் புதனுடனும், சில நாட்கள் சுக்கிரனுடனும் ஒன்றிணைந்து பயணிப்பார்.

அதோடு இந்த ஆடி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, பணத்தை குவிக்கும் மாதமாக இருக்கப் போகிறது. இப்போது 2025 ஆடி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆடி மாதமானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. கேது மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் பலவற்றில் தடைகளை சந்தித்திருப்பீர்கள். ஆனால் ஆடி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் செவ்வாய் ராசியை மாற்றுவதால், வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. திடீரென்று வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இதுவரை வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். ஆனால் இந்த ஆடி மாதத்தில் சூரியனின் செல்வாக்கு அதிகரிப்பதால், இதுவரை நிறைய செலவுகளை சந்தித்து வந்தால், இம்மாதத்தில் அந்த வீட்டு பராமரிப்பு செலவுகள், மருத்துவ செலவுகள் போன்ற வீண் செலவுகள் குறைந்து, இந்த ராசிக்காரர்களின் சேமிப்புகள் உயரும். மேலும் சூரியன் லக்ன வீட்டில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான பலன்களைப் பெறக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் எந்த தடையும் இருக்காது. சுக்கிரனின் ஆசியால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால கடின உழைப்பிற்கான பலன் இந்த ஆடி மாதத்தில் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஆடி மாத கிரக நிலைகளால் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, அதிர்ஷ்டத்தின் ஆதரவால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களுடன், நல்ல லாபத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பண வரவில் உள்ள தடைகள் நீங்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் குவியும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இதுவரை கேது மற்றும் செவ்வாய் சேர்க்கையால் வாழ்க்கையில் பல சவால்களையும், குழப்பங்களையும் சந்தித்திருப்பார்கள். ஆனால் ஆடி மாதத்திற்கு பின் செவ்வாயின் நிலையில் ஏற்படும் மாற்றத்தால், வாழ்க்கையில் ஒரு தெளிவு பிறக்கும். முன்னேற்றத்தில் இருந்த தடைகள் விலகி, ஒரு நல்ல உயரத்தை அடைவீர்கள். முக்கியமாக ஆடி மாதத்தில் சுக்கிரன் மற்றும் புதன் சாதகமான நிலையில் இருப்பதால், பண வரவிற்கு குறைவே இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications