For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோல்கேட்டில் கலக்கப்படும் இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குகிறது - ஆய்வில் அதிர்ச்சி!!

|

உலக அளவில் பெரும் முன்னணி டூத்பேஸ்ட் நிறுவனமாக விளங்கி வருகிறது கோல்கேட். பெரும்பாலான மக்கள் இந்த டூத் பேஸ்ட்டை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், கடந்த வருடம் நச்சுயியல் ஆய்வு கழகத்தினால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கோல்கேட் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒருவகை இரசாயனம் ஆனது புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்!!!

இது, துணி துவைக்கும் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரைக்ளோசான்(triclosan) எனப்படும் இந்த இரசாயனம் குறித்த ஆய்வுகள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்தே பெருமளவில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பிரபல இந்திய உணவுப் பொருட்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயங்கரமான இரசாயனம்

பயங்கரமான இரசாயனம்

ட்ரைக்ளோசான் எனப்படும் இந்த இரசாயனம் மிகவும் பயங்கரமானது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது டியோடிரன்ட், ஆன்டிசெப்டிக், மற்றும் கை கழுவும் திரவங்கள் போன்றவற்றில் பரவலாக சேர்க்கப்படும் இரசாயனம் என்று கூறப்படுகிறது. மேலும் சில வகையான துணி துவைக்கும் சலவை சோப்புகளிலும் கூட இது சேர்க்கப்படுகிறது.

நச்சுயியல் ஆய்வு கழகம்

நச்சுயியல் ஆய்வு கழகம்

நச்சுயியல் ஆய்வு கழகம் (Chemical Research in Toxicology) வெளியிட்ட ஆய்வறிக்கையில் , இந்த இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

முக்கியமான பிரச்சனை

முக்கியமான பிரச்சனை

இந்த தீங்கு விளைவிக்கும் மூலப்பொருள், சருமத்தை ஊடுருவி, இரத்தத்தில் கலந்து ஹார்மோன் சமநிலையை சீர்குலைந்து போக செய்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கனடாவில் தடை

கனடாவில் தடை

உலகிலேயே கனடாவில் மட்டும் தான் ட்ரைக்ளோசான் எனப்படும் இந்த இரசாயனம் தடை செய்யப்பட்டுள்ளது. முதலில் இதன் பக்கவிளைவுகள் பற்றி அறிந்துக் கொண்ட கனடா அரசு பின்னாளில் மொத்தமாக தடை செய்தது.

கோல்கேட் தரப்பு விளக்கம்

கோல்கேட் தரப்பு விளக்கம்

ஆதாரங்களும், ஆய்வாளர்களும் இவ்வாறு கூற, கோல்கேட் தரப்பு, தங்கள் தயாரிப்பு பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானவை என்று அவர்களது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.

மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்

மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்

இனி, இது குறித்து மக்கள் தான் ட்ரைக்ளோசான் எனப்படும் கேடு விளைவிக்கும் இரசாயன கலப்பு உள்ள பொருட்களை பயன்படுத்தலாமா, வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும். உங்கள் உடல்நலன் அனைத்தையும் விட முக்கியமானது என்பதை நீங்கள் மறந்துவிட கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Colgate Toothpaste Leads To Cancer

In a recent study, researchers found that an ingredient namely triclosan is used in colgate, which leads to cancer. read here in tamil.
Story first published: Wednesday, December 2, 2015, 11:54 [IST]
Desktop Bottom Promotion