For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீராத முதுகு வலியா? தசைப் பிடிப்பா? இதை ட்ரைப் பண்ணுங்க

|

சில சமயங்களில் வேலை அளவுக்கு அதிகமாக இருக்கும்போது, அல்லது தவறான முறைகளில் அமரும்போது, தூங்கும் போது, முதுகு வலி, தசை பிடிப்பு வரும். இவற்றால் சில சமயங்களில் தூக்கம் பாதிக்கும்.

Warm rub to relax sore muscle

நார்மலாக இருக்க முடியாது. இதற்கு பாராசிடமாலை தேடிப் போக வேண்டாம். இயற்கையான முறையில் இந்த மாதிரி வலிகளை குணப்படுத்தலாம்.

வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு வலி நிவாரணியை நாமே செய்யலாம். இது ஆர்த்ரைடிஸ் வலி, உடல் வலி, தசை பிடிப்பு, என எல்லாவற்றிற்கும் நிவாரணம் தரும்.

அதற்கு செய்யத் தேவையானவை என்னெவென்று பார்ப்போம்

தேவையானவை :

தேங்காய் எண்ணெய் -அரை கப்
கோகோ பட்டர்- 1 கப்
புதினா எண்ணெய் -15 துளிகள்
கிராம்பு எண்ணெய் -8 துளிகள்
யூகளிப்டஸ் எண்ணெய் -15 துளிகள் உடல்
சோளமாவு -1 டீ ஸ்பூன்
இஞ்சித் தூள் -1 டீ ஸ்பூன்

மேலே கூறியயவற்றை ஒன்றாக கலக்கி, ஒரு பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும். இதன் செய்முறை எளிது. கெட்டு போகாது. நிறைய நாட்களுக்கு வரும்.

இந்த எண்ணெயை வலியுள்ள இடத்தில் பூசி, இதமாய் மசாஜ் செய்யவும். சில நிமிடங்களிலேயே வலி பறந்துவிடும்.

புதினா, யூகளிப்டஸ், கிராம்பு எண்ணெய், நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை தளர்த்து, புத்துணர்ச்சியை தருகிறது. தேங்காய் எண்ணெய் கோகோ பட்டர், எலும்புகளை பலப்படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

கிராம்பு எண்ணெயில் வலியை மரக்கச் செய்யும் குணம் இருக்கிறது. இந்த எண்ணெய் வலி இருக்கும் இடங்களில் செயல்படுகிறது.

இஞ்சி உடலில் ஏற்படும் வீக்கத்தை கட்டுபடுத்தி, வலியினை குறைக்கிறது. சோள மாவு இதில் சேர்ப்பதற்கு காரணம், இந்த எண்ணெய்கள் சருமத்தில் எண்ணெய் பசையை அதிகப்படுத்து. இந்த மாவு அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிக் கொள்கிறது.


இந்த எண்ணெய் எலும்புகளுக்கு பலம் அளித்து, தசைகளுக்கு புத்துணர்வு தருகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் வலி குறைந்து புத்துணர்வோடு இருப்பீர்கள். முயற்சி செய்து பாருங்கள்.

English summary

Warm rub to relax sore muscle

Warm rub to relax sore muscle
Story first published: Sunday, May 29, 2016, 7:47 [IST]
Desktop Bottom Promotion