For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அறுவை சிகிச்சைக்கு பிறகு நீங்கள் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய டயட் !!

அறுவை சிகிச்சை செய்வதால் புண் ஆற நாளாகும். அதே போல் ரத்தமும் குறைந்திருக்கும். மருந்துக்களின் வீரியம், நச்சு சேர்ந்து பலவீனப்படுத்தியிருக்கும். அந்த சமயத்தில் நீங்கள் உண்ணும் உணவும் முக்கியமானது.

|

அறுவை சிகிச்சை சிறியதோ பெரியதோ, அதற்கு பின் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் குணமாற்றுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது.

Foods to recover quickly after surgery

அறுவைசிகிச்சைக்கு பின் நீங்கள் சாப்பிடும் உணவினையும் கவனிக்க வேண்டும். எவ்வாறான உணவை நீங்கள் சாப்பிட வேண்டுமென இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. தொடர்ந்து கவனியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நார்ச்சத்து உணவுகள் :

நார்ச்சத்து உணவுகள் :

அறுவை சிகிச்சையினால் சாப்பிட்ட மருந்துகளால் உங்களுக்கு மலச்சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதே சமயம் உடலில் சேரும் மருந்துகளின் வீரியம் விளைவுகளை ஏற்படுத்தாமலிருக்க நார்சத்து கொண்ட அதிக காய், பழங்களை உண்ணுங்கள்.

புரத உணவுகள் :

புரத உணவுகள் :

புரத உணவுகள் காயங்களை விரைவில் ஆற்றும். வீக்கத்தை குறைக்கும். சிகிச்சை நடைப்பெற்ற இடத்தில் திசுக்கள் உருவாக உதவி புரியும். பனீர், சீஸ், பருப்பு வகைகள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

நல்ல கொழுப்பு அமில உணவுகள் :

நல்ல கொழுப்பு அமில உணவுகள் :

தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், மற்றும் ஆலிவ் என்ணெய்களில் நல்ல கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை வீக்கங்களையும் புண்களையும் ஆற்றும். ஆகவே அவற்றில் சமைப்பதை பழக்கப்படுத்துங்கள்.

ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவுகள் :

ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவுகள் :

ஆன்டி ஆக்ஸிடெட்ன் நிறைந்த புரொக்கோலி, பசலை கீரை கேரட், பீட்ரூட், சிட்ரஸ் பழ வகைகள் ஆகியவ்ற்றை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும். இவை அறுவை சிகிச்சையினால் உண்டான புண்களை குணமாக்கும்.

ப்ரோபயாடிக் உணவுகள் :

ப்ரோபயாடிக் உணவுகள் :

இந்த சமயத்தில் நீங்கள் அதிக ஆன்டிபயாடிச் சாப்பிட வேண்டியதிருக்கும். இவை வயிற்றில் உருவாகும் நல்ல பேக்டீரியாக்களை தடுக்கின்றன.

இதனால் அசிடிட்டி முதற்கொண்டு வயிற்றுப் பிரச்சனைகள் உண்டாகும். இந்த பிரச்சனையை சமாளிக்கு அதிக ப்ரோபயாடிக் உணவுகளை சாப்பிடுங்கள். இவை நல்ல பேக்டீரியாக்களை பெருகச் செய்யும். யோகார்ட், தயிர், முளைகட்டிய பயிறு வகைகள் ஆகியவற்றை உண்ணுங்கள்.

மினரல் நிறைந்த உணவுகள் :

மினரல் நிறைந்த உணவுகள் :

மினரல் அதிகம் நிறைந்த உணவுகள் புண்களை காயங்களை விரவில் குணமடையச் செய்யும். முட்டை, கடல் உணவுகள், பீன்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

 நீராகரம் அதிகம் உள்ளவைகள் :

நீராகரம் அதிகம் உள்ளவைகள் :

எளிதில் உணவுகள் ஜீரணமடையவும், நச்சுக்கள், கழிவுகள் வெளியேறவும் நீர் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். சூப், பழச் சாறுகள், நீர் ஆகியவை உங்கள் ஜீரண மண்டலத்தின் வேலைகளையும் சிறு நீரக வேலையையும் எளிமைபடுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods to recover quickly after surgery

Foods to be followed after surgery to recover soon from inflammation and pain.
Story first published: Tuesday, October 25, 2016, 14:53 [IST]
Desktop Bottom Promotion