சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் உண்டாகும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

சர்க்கரை வள்ளிக் கிழங்கு எல்லா பருவங்களிலும் கிடைக்கக் கூடியது . நிறைய சத்துக்கள் கொண்டவை.சர்க்கரை வள்ளி கிழங்கின் நன்மைகளை தெரிந்தால் அடிக்கடி உண்ண ஆரம்பிப்பீர்கள். இதோ உங்களுக்காக

Written By:
Subscribe to Boldsky

பொதுவாக கிழங்குகள் சாப்பிடக் கூடாது. குண்டாகிவிடுவோம் என்று நீங்கள் கேள்விப்படுவதுண்டு. உண்மையில் இதில் சர்க்கரை வள்ளி கிழங்கு விதி விலக்கு.

இதன் சுவை அபாரம். இனிப்பாகவும், வாசனையுடன் இருக்கும் இதனை சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். அதோடு அதில் சத்துக்களும் அதிகம் உள்ளது.

Health benefits of sweet potato

சர்க்கரை வள்ளி கிழங்கு ஏன் சூப்பர் உணவு என தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சத்துக்கள் வழியும் கிழங்கு :

சத்துக்கள் வழியும் கிழங்கு :

இதனை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இது சத்துக்களின் கூடாரம் . அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன.

விட்டமின் ஏ, பி, சி, இரும்பு, பொட்டாசியம், ஆகியவை உள்ளன. இவை நல்ல உடன் நலத்தையும், சருமம், எலும்பு உருவாவதற்கும் தேவையான சத்துக்களை அளிக்கிறது.

கொழுப்பற்ற கிழங்கு :

கொழுப்பற்ற கிழங்கு :

பொதுவாக எல்லா வகை கிழங்குகளில் கொழுப்பு அதிகம் இருக்கும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு இல்லை. அதிக நார்சத்து உள்ளது. எனவே ஒன்று சாப்பிட்டாலும் வயிறு நிறையும்.

 உறுப்புகளின் பாதிப்புகளை சரிப்படுத்தும் :

உறுப்புகளின் பாதிப்புகளை சரிப்படுத்தும் :

உடல் உள்ளுறுப்புகளில் பாதிப்பு மற்றும் வீக்கங்கள் உண்டானால் அவற்றை சரிப்படுத்தும். விட்டமின் பி,சி மற்றும் நார்ச்சத்து ஆகியவைகளை கொண்டது. அதிக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை.

கரு உருவாக உதவும் :

கரு உருவாக உதவும் :

கர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதிலுள்ள ஃபோலேட் கருவளர்ச்சிக்கு உதவும்.

எந்த முறையிலும் சாப்பிடலாம் :

எந்த முறையிலும் சாப்பிடலாம் :

இந்த கிழங்கை வேக வைத்தோ சுட வைத்தோ அல்லது சிப்ஸ் போலவோஅ எப்படி சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் முழுதும் கிடைக்கும் என்கிறார்கள்.

 நுரையீரல் நோயை குணமாக்க :

நுரையீரல் நோயை குணமாக்க :

நுரையீரல் காற்றுப் பையில் எழும் பிரச்சனையின் காரணமாக வரும் நோய்தான் எம்ஃபைசீமா என்பது.

இந்த நோயினால் சிறிது சிறிதாக ஆரம்பித்து மூச்சு விடுவதில் பிரச்சனை உண்டாகும். இதற்கு தினமும் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்டால் இந்த நோய் குணமாகும்.

வயிற்று அல்சரை குணமாக்க :

வயிற்று அல்சரை குணமாக்க :

சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள அனைத்து விட்டமின்களும், மினரல்களும் வயிற்ற்ல் உண்டாகும் அல்சரை குணப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of sweet potato

Eating of sweet potato on regular basis, you will get number of health benefits and here is the reason why its considered as a super food.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter