Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
ஆண்களே! உங்கள் தொப்பையைக் குறைக்க இதோ அருமையான வழிகள்!!!
தொப்பையில்லாத வயிற்றுடன் இருப்பது நேர்மறையான எண்ணங்கள் மற்றும் உடல் மொழியை வெளிப்படுத்தும் சிறந்த வழிகள் என்பதை ஆண்கள் யாரும் மறுக்கப் போவதில்லை. அது ஆரோக்கியமான எண்ணங்களை உருவாக்கி, மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உங்களையும் கொண்டு சேர்க்கும்.
ஒரு பெரிய தொப்பையுடன் இருக்கும் ஆணை பொதுவாக யாரும் விரும்பமாட்டார்கள். அர்ப்பணிப்பு உணர்வும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் நமக்கு தொப்பையை குறைத்து அழகான வயிற்றைத் தரும். எந்த ஒரு மனிதரும் நல்ல உடலமைப்பையும், தட்டையான வயிற்றையும் வைத்திருப்பது பலரை கவரக் கூடியதாக இருக்கும்.
விடுமுறை நாட்களில் அளவாக சாப்பிட்டு, உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள வேண்டுமா?
ஒருவேளை உங்களுக்கு நடுத்தர அளவில் தொப்பை இருந்தாலோ, மிகவும் பெரிதாக தொப்பை இருந்தாலோ அந்த கொழுப்பை குறைக்க இப்போதே முயற்சிக்க வேண்டியது அவசியமாகும். முதலில் எளிய முறையில் முயற்சியைத் துவங்க வேண்டும். எளிய முறையில் அட்டவணையிட்டு உணவுமுறைகளில் கட்டுப்பாட்டையும் மற்றும் எளிய உடற்பயிற்சிகளையும் துவங்க வேண்டும்.
பயிற்சியின் நேரத்தை நாட்கள் செல்ல செல்ல அதிகரித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் கொழுப்பு கரைந்த தன்மையை உணரும் போது உங்களுக்குள் ஒரு புத்துணர்வை நீங்கள் உணருவீர்கள். உங்கள் உடம்பும் ஆரோக்கியமாக மாறுவதை உணருவீர்கள்.
எடை அதிகரிப்பதை தடுத்து பசியைப் போக்கும் சில ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்கள்!!!
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை குறைத்து ஊட்டச்சத்து நிறைந்த பிற உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது சிறந்தது. உடலில் உள்ள கொழுப்பை குறைத்து மெல்லிய உடலை கொண்டு வரும் பல உணவு வகைகள் உள்ளன. வெள்ளை அரிசியைத் தவிர்த்து பழுப்பு அரிசியை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.
பழுப்பு அரிசியும், கோதுமை ரொட்டியையும் உண்டால் உங்கள் உடலுக்கு மெதுவாகவும் நிலையாகவும் சக்தி கிடைக்கின்றது. இதனால் பசி வருவதையும் தள்ளிப் போடலாம். முட்டையின் வெள்ளை கரு பகுதியை காலை உணவுடன் உண்பது தொப்பையை வெகுவாக குறைக்க உதவுகின்றது.

ஆரோக்கியமான காலை சிற்றுண்டி
தட்டையான வயிற்றை பெற உங்களது முதல் வழி இதோ! முட்டையின் வெள்ளை கரு பகுதி, பிரவுன் பிரட், காய்கறிகள், பாதாம், ஓட்ஸ் ஆகியவற்றை முழு தானியங்களாக உண்ண வேண்டும். இவற்றில் உள்ள உயர்ந்த சத்துக்கள் மற்றும் கடினமான கார்போஹைட்ரேட் ஆகியவை உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகின்றன. இதனால் தட்டையான வயிற்றைப் பெற முடியும்.

தேவையான அளவு தண்ணீர்
பெரும்பாலான ஆண்கள் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீரை குடிப்பதில்லை. நமது உடம்பை சுத்தப்படுத்தும் சக்தி தண்ணீருக்கு மட்டும் தான் உண்டு. உடம்பில் உள்ள தேவை இல்லாத கழிவுகளை வெளியே அனுப்பும் சக்தி கொண்ட பொருள் தண்ணீராகும். மீதமுள்ள மற்றும் செரிக்க முடியாத உணவு பொருட்களையும் தண்ணீர் வெளியே அனுப்பிவிடும். இத்தகைய செயல்களால் கொழுப்பு உடம்பில் சேர்வதை தவிர்க்க முடியும்.

தினசரி உடற்பயிற்சி
எளிமையான முறையில் ஓடுவது அல்லது நடப்பது போன்ற பயிற்சிகளை உடனடியாக ஆரம்பிப்பது நல்லது. உங்கள் மனதை இதற்காக தயார் செய்து கொள்வது நல்லது. இன்னொரு நாள் இதை செய்யலாம் என்று தள்ளிப் போட போட நம்மால் இத்தகைய செயல்களை செய்யாமல் போய் நம் முயற்சியில் தோற்றுவிடுவோம். 20 நிமிடங்கள் கார்டியோ மற்றும் 20 நிமிடம் கீழ் வயிற்றை குறைப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டால் சில மாதங்களிலேயே மெல்லிய இடையை பெற முடியும்.

முழு தானியங்கள்
உணவு முறையைப் கவனிக்கும் போது காலை நேரங்களில் முழு தானியங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. பழுப்பு அரிசி, கோதுமை, ஓட்ஸ், ஆகிய தானியங்களை உண்பது சிறந்தது. இவை மிகவும் சக்தி வாய்ந்தவையாகவும், உடம்பில் இருக்கும் சக்தியை மெது மெதுவாக பயன்படுத்தவும் உதவுகின்றன. இதனால் நாம் வேகு நேரத்திற்கு பசியின்றி இருக்கக்கூடும். இதனால் நாம் உண்ணும் உணவின் அளவு குறையும்.

சீக்கிரம் இரவு உணவை உண்பது
தட்டையான வயிற்றுப் பகுதியை பெற இதுவும் ஒரு முக்கியமான செயலாகும். படுக்கைக்கு போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் உணவை உண்டால் அவை படுப்பதற்கு முன்பே செரித்துவிடும். இதனால் படுக்கும் போது வயிற்றில் செரிக்கப்படாத உணவேதும் இருக்காது. இவ்வாறு செரிக்கப்படாத உணவு வயிற்றிலேயே இருந்தால் அவை அதிக அளவு கொழுப்பை நமது வயிற்றுப்பகுதியில் சேர்த்து விடும் மற்றும் தொப்பையை உண்டாக்கும்.

பழங்கள் மற்றும் உலர் பழங்கள்
தட்டையான வயிற்றை பெறுவதில் பழங்கள் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. இவை நல்ல செரிமானத்தை உண்டாக்கி, மலச்சிக்கல்களை தவிர்த்து, கொழுப்பு நிறைந்த உணவை உண்ட பின் குறைந்த கலோரிகள் நிறைந்த பிறசேர்க்கை உணவாக நமக்கு பயன்படுகின்றன. அந்தந்த காலத்தில் நமக்கு கிடைக்கும் பழங்களை நாம் உண்பதன் மூலம் நமக்கு தேவையான நார்ச்சத்தும் கிடைக்கின்றது. அதுமட்டுமின்றி உடலில் நல்ல செரிமானம் ஏற்பட்டு கழிவுகளை எளிதாக வெளியேற்றவும் முடிகின்றது.



Click it and Unblock the Notifications











