For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?

By Ashok CR
|

ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும். ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.

அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது . ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.

சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Oatmeal Really Lead To Weight Loss?

Oats are used as a major food in many weight loss diets. Oats are rich in vitamins, fiber, minerals and nutrients. Apart from being good for weight loss oats also prevent heart defects and diseases. A few explanations and facts that prove the oat diet is good to reduce weight are discussed below:
Story first published: Monday, December 23, 2013, 19:56 [IST]
Desktop Bottom Promotion