For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் சிறந்த 16 வழிகள்!!!

By Super
|

தற்போதுள்ள நவநாகரீக நவீன யுகத்தில், அழகியல் குறித்த விழிப்புணர்வு சிறியோர் முதல், பெரியோர் வரை மேலோங்கி நிற்பதை நன்கு காணலாம். அழகிய முகத்தோற்றம் மட்டுமின்றி, நல்ல அழகான உடல் தோற்றமும், கட்டான உடலமைப்பும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் விரும்புகிறார்கள். முகத்தோற்றம் எவ்வளவு அழகாக இருந்தாலும், ஒருவரது உடலானது அவரது வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையைக் கொண்டிராமல், மிக அதிக எடையுடன் காணப்பட்டால், அவருடைய முக அழகு யாராலும் பாராட்டப்படுவதில்லை. எனவே ஒரு முழுமையான அழகு என்பது முகத்தோற்றத்தில் மட்டுமின்றி உடல் அமைப்பையும் பொறுத்தது ஆகும்.

எனவே இத்தகைய அழகிய கட்டான உடலழகைப் பெறுவதற்கு வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கட்டுப்பாடான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளால் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்து, அழகான உடல் அழகைப் பெறலாம். இப்போது அதிகப்படியான எடையைக் குறைப்பதற்கு கீழ்க்கண்ட சில வழிமுறைகள் பெரிதும் உதவியாக இருக்கும். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனிப்புப் பொருட்களைத் தவிர்த்தல்

இனிப்புப் பொருட்களைத் தவிர்த்தல்

இனிப்புச் சுவையை அதிகம் விரும்புபவராக இருந்தால், உணவுக்குப் பின் உண்ணும் டெசர்ட் எனப்படும் இனிப்பு உணவை நிச்சயம் சாப்பிடுவீர்கள். ஆனால் இனிப்பு கலந்த உணவு உண்பதை உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் சர்க்கரையானது, கலோரியைத் தவிர வேறு எதையும் தருவதில்லை. ஆகவே சர்க்கரை உள்ள உணவை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும்.

டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட வேண்டாம்

டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட வேண்டாம்

பிடித்த படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுது தம்மை அறியாமலேயே அதிகமான உணவை எடுத்துக் கொள்ள நேரிடும். எனவே தொலைக்காட்சி பார்க்கும் பொழுது உணவு உண்பதைத் தவிர்த்து விடவும்.

உணவு குறித்த கையேட்டைத் தயார் செய்தல்

உணவு குறித்த கையேட்டைத் தயார் செய்தல்

உணவு வகைகளை உண்ணும் பொழுது, என்னென்ன சாப்பிடுகிறோம், அதனுடைய கலோரியின் அளவு எவ்வளவு, போன்றவற்றைக் குறித்து வைத்துக் கொண்டால், எந்த உணவுப் பொருள்களையெல்லாம் எடுத்து கொள்கிறோம் என்பதையும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையுணர்வும் மனதில் ஏற்படும்.

வெகு நேரம் பசியோடு இருக்க வேண்டாம்

வெகு நேரம் பசியோடு இருக்க வேண்டாம்

வெகு நேரம் கழித்து பசியுடன் உண்ணும் பொழுது மிகுந்த அளவு உணவை சாப்பிட நேரிடும். எனவே சரியான நேரத்தில், சரியான அளவு உணவை உண்ண வேண்டும்.

பசியுடன் எங்கும் செல்ல வேண்டாம்

பசியுடன் எங்கும் செல்ல வேண்டாம்

விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முன், சிற்றுண்டி வகைகள் அல்லது சூப் போன்ற உணவை சாப்பிட்டு செல்ல வேண்டும். வெறும் வயிற்றுடன் விருந்துக்களுக்கு செல்லும் பொழுது, மிக அதிக அளவு உணவை உண்ண நேரிடும்.

நிறைய தண்ணீர் பருகவும்

நிறைய தண்ணீர் பருகவும்

எடையைக் குறைக்கும் முயற்சியில் இருக்கும் பொழுது அதிக அளவு தண்ணீர் பருகுங்கள். அதிக அளவு தண்ணீர் பருகி வந்தால், உடல் எப்பொழுதும் அதிக அளவு ஈரத்தன்மையுடன் இருககும்.

ஜுஸ் அதிகம் குடிக்கவும்

ஜுஸ் அதிகம் குடிக்கவும்

முழு பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு மாறாக, பழச் சாறுகள் மற்றூம் பழங்களால் செய்யப்பட்ட பான வகைகளைக் குடிக்கும் பொழுது அதிக அளவு கலோரி கிடைக்கும்.

ஃபாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்கவும்

ஃபாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்கவும்

ஃபாஸ்ட் புட் உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளும் பொழுது எடையும் வேகமாக ஏறிவிடும். எனவே, அதிகக் கலோரிகளைக் கொண்ட பர்கர், பீட்சா மற்றும் எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை முழுவதுமாக தவிர்த்துவிட வேண்டும்.

பொருளை வாங்கும் முன் அதன் மீது ஒட்டப்பட்டுள்ள அட்டவணையைப் படிக்கவும்

பொருளை வாங்கும் முன் அதன் மீது ஒட்டப்பட்டுள்ள அட்டவணையைப் படிக்கவும்

ஒரு உணவுப் பொருளை வாங்கும் பொழுது, அதிலுள்ள கொழுப்பின் அளவைப் பார்த்து வாங்க வேண்டும். கொழுப்பு குறைந்த மற்றும் கொழுப்பு இல்லாத உணவுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கவும். வறுத்த அல்லது பொரித்த உணவு வகைகளை விட வேகவைத்த/வெதுப்பிய உணவு (Baked) வகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு நன்கு தேர்ந்தெடுத்து வாங்கும் பொழுது, உண்ணும் உணவின் கலோரியைக் கவனத்துடன் அறிந்து கொள்வதோடு, கட்டுப்பாட்டுடனும் உணவை உண்ணலாம்.

தவறாமல் உடற்பயிற்சி செய்தல்

தவறாமல் உடற்பயிற்சி செய்தல்

ஜிம் போன்ற உடலுக்குப் பயிற்சி அளிக்கும் இடங்களுக்குச் செல்ல நேரம் இல்லாவிட்டாலும் கூட, தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உடல் எடையைக் குறைக்க முற்படுபவர்கள், நல்ல உடற்பயிற்சியை மேற்கொள்வதால், வளர்சிதை மாற்றத்தின் மூலம் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும்.

சூப் மற்றும் சாலட் வகை சாப்பிடவும்

சூப் மற்றும் சாலட் வகை சாப்பிடவும்

உணவில் சூப் மற்றும் சாலட் வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி தயாரிக்கும் உணவு வகைகளில் கொழுப்பில்லாத பொருட்கள், கிரீம் போன்றவற்றை சேர்க்காமல் உண்ணவும்.

நடு இரவில் பசித்தாலும் உண்ணக்கூடாது

நடு இரவில் பசித்தாலும் உண்ணக்கூடாது

நடு இரவில் உணவு உண்ணவே கூடாது. தூங்குவதற்கு முன் 2 முதல் 3 மணி நேரங்களுக்கு முன்னதாக உணவு உண்டு முடித்திருக்க வேண்டும். தூங்கப் போகு முன் உணவு உண்ணக் கூடாது.

காலை உணவைத் தவிர்க்க கூடாது

காலை உணவைத் தவிர்க்க கூடாது

ஒரு பொழுதும் காலை உணவைத் தவிர்த்து விடக்கூடாது. நல்ல சத்தான முழுமையான காலை உணவு, வளர்சிதை மாற்றத்தை நன்கு தூண்டி விட உதவும்.

இரவு உணவைக் கொஞ்சமாக சாப்பிடவும்

இரவு உணவைக் கொஞ்சமாக சாப்பிடவும்

"காலையில் அரசனைப் போல் சாப்பிடு, இரவில் ஆண்டியைப் (பிச்சைக்காரன்) போல் சாப்பிடு" என்று ஒரு பழமொழி உண்டு. இதில் எப்படி ஒரு அறிவார்ந்த உண்மை பாருங்கள். ஏனெனில், இரவில், தூங்கிய பின்பு, அதிக அளவு கலோரிகள் எரிக்கப்படமுடியாது. எனவே, குறைந்த அளவு கலோரி கொண்ட எளிமையான உணவையே இரவில் உண்ண வேண்டும்.

சாப்பிடும் அளவை அறிந்து சாப்பிடவும்

சாப்பிடும் அளவை அறிந்து சாப்பிடவும்

உணவு உண்ணும்பொழுது, வயிறு நன்கு நிறைந்த உணர்வு ஏற்பட்டவுடன், சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். இவ்விஷயத்தில் மிகச் சரியாக நடந்து கொள்ள வேண்டும்.

மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வத்துடனும் வாழவும்

மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வத்துடனும் வாழவும்

மன அழுத்தம், கவலை போன்றவை இருந்தால், அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள நேரிடும். எனவே மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் வாழுங்கள்.

மேற்கண்ட எளிய வழிமுறைகளை மேற்கொள்வதால், மிகச்சரியான எடையை பேணி வர முடியும். மேலும் சரியான வாழ்க்கை மற்றும் உணவு முறைகளால், தேவையற்ற உடல் எடையை நாம் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

16 Ways to Avoid Gaining Weight

Avoiding weight gain is not difficult, provided you show a little discipline, determination and care. Read on to know about 16 simple ways by which you can successfully avoid gaining weight.
Desktop Bottom Promotion