Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
தம்பதிகளே! நீங்க சோஷியல் மீடியாவில் இருக்கீங்களா? அப்ப இந்த விஷயங்கள ஃபாலோ பண்ண மறந்துடாதீங்க!
World Social Media Day: சமூக ஊடகங்கள் பற்றிய பல விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கிறது. இது ஆரோக்கியமானதா? இல்லை கெட்டதா? என்ற விவாதம் பொதுவெளியில் உள்ளது. ஆனால், ஒரு உறவில் தம்பதிகளுக்குள் சமூக ஊடகங்களால் ஏதேனும் பிரச்சனை வருமா? அது அவர்களின் உறவை பாதிக்குமா? என்ற கேள்விகளும் உள்ளன.
சில சமயங்களில் சமூக ஊடகங்கள் மூலம் நாம் உறவுகளை வளர்த்து கொள்கிறோம். அதேசமயம் சமூக ஊடகங்களால், பல உறவுகள் பிரிவது மற்றும் பல்வேறு மோசடிகளும் நிகழ்கின்றன. எனவே, சமூக ஊடகத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே, அதனால் நாம் பெறும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன.

சமூக ஊடகங்கள் உறவுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்திருந்தாலும், அதை அதிகமாக எடுத்துச் செல்வது உறவுக்கு தீங்கு விளைவிக்கும். பொய் எது? உண்மை எது? என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு சமூக ஊடகங்களில் மிகவும் வெறித்தனமாக செயல்படுவர்க்ளை நாம் பார்த்திருப்போம்.
சமூக ஊடகங்களில் ஈடுபடுவது ஒரு தனிப்பட்ட நபரால் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து ஒரு நெருக்கமான உறவை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும், இது ஒரு நபரின் மன ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சமூக ஊடக எல்லைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
ஒப்பிட வேண்டாம்
சிலர் சமூக ஊடகங்களில் வெறித்தனமாக இயங்கிகொண்டிருப்பார்கள். அவர்கள் தினசரி செய்யும் அனைத்தையும் சமூக ஊடகங்களில் ஆவணப்படுத்த விரும்புகிறார்கள். நீங்கள் அவர்களை உங்கள் உத்வேகமாக மாற்ற வேண்டியதில்லை. ஏனெனில், அது உங்கள் சொந்த உறவில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். சமூக ஊடக மாயத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் மற்றும் உங்கள் துணையின் மீது கவனம் செலுத்துங்கள்.
ஒவ்வொரு உறவும் தனித்துவமானது சமூக ஊடகங்களில் தோன்றுவதெல்லாம் உண்மையில் உண்மையாக இருக்காது. எனவே, அடுத்த முறை சமூக ஊடகங்களில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு ஜோடியை நீங்கள் பார்க்கும் போது, உங்கள் சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட வேண்டாம்.
கண்காணிக்க வேண்டாம்
சமூக ஊடகங்களில் உங்கள் துணையைப் பின்தொடர்வதில் தவறில்லை. ஆனால் அவர்களின் காலவரிசையைப் பின்தொடர்வது மற்றும் அவர்களின் டிஜிட்டல் தடயத்தைக் கண்காணிப்பது ஆகியவை உங்கள் உறவுக்கு தீங்கு விளைவிக்கும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தனிப்பட்ட இடம் உள்ளது. அவர்களுக்கு அவர்களின் சொந்த இடத்தைக் கொடுங்கள் மற்றும் அவர்களின் சமூக ஊடகங்களை எப்போதும் கண்காணிக்காதீர்கள்.
அதற்கு பதிலாக உங்கள் மீது கவனம் செலுத்துங்கள் மற்றும் உங்கள் உறவில் மாற்ற வேண்டிய விஷயங்கள் மீது கவனம் செலுத்துங்கள். எனவே, நீங்கள் அவர்களின் சமூக ஊடக வாழ்க்கையில் ஆரோக்கியமான முறையில் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால், அவர்களின் எல்லைக்குள் நுழையாதீர்கள்.
நேரத்தைக் கண்காணிக்கவும்
சமூக ஊடகங்களில் நாம் இருக்கும்பொது, நேரம் போவதே நமக்கு தெரியாது. எனவே, அங்கு நேரத்தை இழப்பது எளிதானது. இரவு நேரங்களில் நண்பர்களை அழைப்பது மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற உங்களின் செயல்கள், உங்கள் துணைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தலாம். சமூக ஊடகங்களில் குறைவான நேரத்தை செலவிட்டு, உங்கள் துணையோடு அதிக நேரத்தை நீங்கள் செலவிட வேண்டும். இது உறவில் இருக்கும் பல பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
தனிப்பட்ட விஷயங்களை பகிர வேண்டாம்
உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால், உங்கள் துணையுடன் நேர்மறையான உரையாடல் செய்வதன் மூலம் அதைத் தீர்க்க முயற்சி செய்வது சிறந்த விஷயம். நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா அல்லது சோகமாக இருக்கிறீர்களா என்பதை சமூக ஊடக நிலைப் புதுப்பிப்பில் இருந்து உங்கள் பங்குதாரர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
உறவில் இரண்டு நபர்களுக்கு மட்டுமே இருக்கும் போது சில விஷயங்கள் சிறப்பாக இருக்கும். மேலும் ஒருவர் அவர்களைப் பற்றி ட்வீட் செய்யவோ அல்லது பேஸ்புக்கில் பதிவிடவோ தேவையில்லை. உங்களுக்குள் இருக்கும் விஷயங்களை பொதுவெளியில் பகிர்வதை நிறுத்துவது ஆரோக்கியமான உறவுக்கு நல்லது.
ஹார்ட் எமோஜிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும்
நீங்கள் ஒரு நல்ல படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து இருக்கலாம். அங்கு யார் வேண்டுமானலும், உங்கள் படங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கலாம், மேலும் இதய எமோஜிகள் மற்றும் முத்த எமோஜிகள் அனுப்பலாம். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்கள் பதிவில் வரும் அனைத்திற்கும் நீங்கள் ரியாக்ட் செய்ய வேண்டியதில்லை.
உங்களுக்குத் தெரியாத ஒருவரிடமிருந்து இதய எமோஜியைப் பெறுவது ஒரு தந்திரமான விஷயமாக இருக்கலாம். ஏனெனில் அவர்களின் நோக்கங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. மேலும், உங்கள் துணை இதைப் பற்றி மகிழ்ச்சியடையாமல் இருப்பதையும், உங்கள் செயல்களை கேள்விக்குள்ளாக்குவதையும் நீங்கள் ஒருபோதும் விரும்ப மாட்டீர்கள். உங்கள் சமூக ஊடக நண்பர்களிடம் அன்பைக் காட்ட விரும்பினால், நீங்கள் அதை எண்ணற்ற வழிகளில் செய்யலாம்.
முன்னாள் காதலன் அல்லது காதலியை பின் தொடர வேண்டாம்
சமூக ஊடகங்களில் உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியுடன் சாட்டிங்கில் ஈடுபடுவது, பின்தொடர்வது ஒரு பெரிய விஷயம் அல்ல. நீங்கள் திருமண உறவில் இருக்கும்போது, உங்கள் முன்னாள் நபரை பற்றி கண்காணிப்பது நல்லதல்ல.
உங்கள் நிகழ்காலத்தில் இல்லாதவர்களை நீங்கள் பின்தொடர வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் தற்போதைய உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே கடந்த கால உறவை நினைப்பதை நிறுத்திவிட்டு முன்னேறுவது நல்லது.



Click it and Unblock the Notifications
