Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
தம்பதிகளே! உங்க உறவில் இந்த அறிகுறிகள் இருந்தா...உங்க இரண்டு பேருக்கும் சுத்தமா பொருத்தமே இல்லையாம்!
மகிழ்ச்சியான உறவில் தம்பதிகள் இருவரும் மிகவும் இணக்கமாக இருப்பார்கள். அதற்கு உறவில் தம்பதிகளுக்குள் பொருந்தக்கூடிய தன்மை இருக்க வேண்டும். தம்பதிகள் இருவரும் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும் என்று இங்கு யாரும் கூறவில்லை.
கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் உறவில் இருப்பது சாதாரணம். ஆனால், அவற்றை தம்பதிகள் எப்படி கையாளுகிறார்கள் என்பதில்தான் அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது. பொருந்தாத உறவில் இருப்பது எப்போதும் உங்கள் உறவுக்கும் மனதிற்கும் நல்லதல்ல. நீங்களும் உங்கள் துணையும் ஒவ்வொரு நாளும் விஷயங்களை சரிசெய்யவும் புரிந்துகொள்ளவும் தயாராக இல்லையென்றால், விஷயங்கள் நிச்சயமாக மோசமானதாக மாறலாம்.

தம்பதிகளுக்குள் இருக்கும் பொருந்தாத தன்மை இருவரின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது அதிக எதிர்மறையான தொடர்புகளுக்கு வழிவகுக்கும், சுயமரியாதையை குறைக்கலாம் மற்றும் மனநலம் பாதிக்கப்படலாம். மேலும், இணக்கமான தம்பதிகள் கூட சில நாட்களில் மற்றும் சூழ்நிலைகளில் ஒருவருக்கொருவர் முரண்படலாம்.
பொதுவான குணங்கள், துணை மீதான ஆர்வங்கள் அல்லது வாழ்க்கை இலக்குகள் இல்லாதது, ஒரு உறவையும் மக்களின் வாழ்க்கையையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கலாம். இணக்கமற்ற உறவில் இருக்கும் தம்பதிகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
உறவில் அதிருப்தியாக இருப்பது
தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்க்கையின் கருத்துக்களுடன் ஒத்துப்போகாதபோது உறவில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கலாம். பொருத்தமற்ற ஜோடிகளைப் பார்க்கும்போது, அவர்கள் வாழ்க்கை முழுவதும் அதிருப்தியாக இருப்பார்கள்.
உறவில் அதிருப்தி ஏற்படுவது வேலை, குடும்பம் மற்றும் குழந்தைகள் போன்ற வாழ்க்கையின் பிற பகுதிகளையும் பாதிக்கலாம். உறவில் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்வதற்க்கு உணர்ச்சி பிணைப்பு, உடல் நெருக்கம் அவசியம்.
தீர்க்கப்படாத மோதல்கள்
தம்பதிகளுக்குள் ஏதேனும் சண்டை அல்லது பிரச்சனை வந்தால், அவற்றுக்கான காரணம் அறிந்து தீர்க்கப்பட வேண்டும். அதேபோல தம்பதிகள் இருவரும் உறவுகளின் ஆரம்ப கட்டங்களில் நம்பிக்கையையும் புரிதலையும் உருவாக்க வேண்டும்.
சண்டை மற்றும் மோதல்களைத் தவிர்ப்பதற்காக பிரச்சனைகளை தீர்க்காமல் கடந்து செல்வது நல்லதல்ல. இது எதிர்காலத்தில் அடிக்கடி சண்டை வருவதற்கு வழிவகுக்கும். ஒவ்வொரு மோதலின்போதும் தம்பதியர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து, இறுதியில் முற்றிலும் பிரிய வாய்ப்பிருக்கு.
சுயமரியாதை
ஒவ்வொரு நபரும் தங்களுக்கான சுயமரியாதையை கொண்டிருக்கிறார்கள். ஆதலால், உங்கள் துணையை எப்போதும் மரியாதையோடு நடத்த வேண்டும். உங்கள் துணையை தாழ்வாக நடத்துவது, அவர்களுக்கு குறைந்த மரியாதை கொடுப்பது போன்றவை சுயமரியாதை குறைவதற்கு வழிவகுக்கும். குறைந்த சுயமரியாதை ஒரு நபரின் சமூக திறன்கள், உடல் தோற்றம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநல நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
ஏமாற்றுதல்
தங்கள் துணை ஏமாற்றும்போது அல்லது துரோகம் செய்யும்போது ஒருபோதும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பொருத்தமில்லாத பல தம்பதிகள் காதல், உணர்ச்சிகள் அல்லது உடலுறவுக்காக தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேறொரு உறவில் ஈடுபட விரும்புகிறார்கள்.
உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இணக்கமாக இருக்கும் நபர்கள், அவர்களின் பெரும்பாலான தேவைகள் உறவுக்குள் பூர்த்தி செய்யப்படுவதால், வேறொரு உறவில் ஈடுபட மாட்டார்கள்.
உற்பத்தித்திறனை குறைக்கிறது
நம் உறவுகள் நம் வாழ்க்கையை மிகவும் ஆழமாக பாதிக்கின்றன. உறவுகளில் பிரச்சனை அல்லது சண்டை என்றால் கவலையாக மனஅழுத்தமாக இருப்போம். அது நம் வேலை செயல்திறனிலும் பிரதிபலிக்கத் தொடங்கும்.
தொடர்ந்து அதிகமாக சிந்திக்க வைப்பதால், வேலையில் கவனம் செலுத்த முடியாது. உறவுகளின் மகிழ்ச்சி பணியின் செயல்திறனுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
இறுதிக்குறிப்பு
இக்கட்டுரையை படித்த பிறகு, பொருந்தாத மற்றும் இணக்கமற்ற உறவுகள் உண்மையில் செயல்படுமா என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், அதற்கான பதில் உங்களிடத்தில்தான் உள்ளது.
உறவை நிலைநிறுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் கடினமாக உழைக்க நீங்கள் தயாரா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நன்றாக யோசித்து தெளிவான முடிவை எடுங்கள்.



Click it and Unblock the Notifications


