Latest Updates
-
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
ஒருவரிடம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் போது எந்த மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் தெரியுமா?
Relationship Tips In Tamil: ஒருவரை காதலிப்பதற்கு முன்னாடி அவர்களுக்கும் உங்களுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி என்பது மிக முக்கியம். அப்படி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாமல் ஒரு உறவுக்குள் அடியெடுத்து வைப்பது தான் மிகப்பெரிய சிக்கலை நமக்கு ஏற்படுத்துகிறது.
உங்களுக்கான ஒருவரை பார்க்கும் போது மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதை கண்டு இருக்கிறீர்களா, முதன் முதலில் பார்த்தவுடன் உங்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறதா அவர்களுடன் அடிக்கடி பேச வேண்டும் என்று தோன்றி இருக்கிறதா? இப்படி இயற்கையாகவே சில மாற்றங்களை நீங்கள் கண்டதுண்டா.

இதெல்லாம் உங்களுக்கும் அவங்களுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன விஷயங்களை பற்றி கூறுகிறது. உங்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும் சமயத்தில் ஒரு உள்ளுணர்வு தோன்றுவது உண்டு.
இந்த உள்ளுணர்வு நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற சரியான நபரைத் தான் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் என்பதை காட்டுகிறது. சரி வாங்க இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் போது என்னென்ன நடக்கும், அதை எப்படி அறியலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
அவரின் வசீகரம் மற்றும் தோற்றம் உங்களுக்கு பிடிக்கும்
எந்தவொரு காரணமும் இல்லாமல் முதல் முறையாக பார்க்கும் போது ஈரக்கப்படுவீர்கள். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்றால் கூட இந்த ஈர்ப்பு உங்களுக்கு ஏற்படும். நீங்கள் ஏற்கனவே ஒருவரையொருவர் நெருக்கமாக அறிந்திருப்பது போன்று உணர்வீர்கள். அவர்கள் உங்கள் எண்ணங்களில் இருப்பதைப் போலவும் நீங்கள் அவர்களின் எண்ணங்களில் இருப்பதைப் போலவும் உணர்வீர்கள். அவரின் தோற்றமும் வசீகரமும் உங்களுக்கு பிடிக்கும்.
கண்கள் எந்த விதத்திலும் பொய் சொல்லாது
நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது உங்கள் கண்கள் பேசிக் கொள்ளும். உங்கள் இருவருக்கும் சில சமயங்களில் வெட்க உணர்வு ஏற்படலாம். இந்த கண்களுடன் பேசிக் கொள்வது வலுவான கெமிஸ்ட்ரி ஈர்ப்பை உங்களுக்கு ஏற்படுத்தும். நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். உடல் ஈர்ப்பை விட கண் ஈர்ப்பு உங்களுக்கு அதிகப்படியான கெமிஸ்ட்ரியை உண்டாக்கும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வை பெறுவீர்கள்.
உங்கள் புன்னகை ஏதோ ஒன்றை சொல்லத் தொடங்கும்
அவரை பார்த்ததும் உங்களுக்கு ஒரு உற்சாகம் ஏற்படும். உங்களை அறியாமலேயே புன்னகைக்க தொடங்குவீர்கள். உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. இதற்காக ஒரு வார்த்தை கூட பேச வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வெறும் புன்னகை மூலம் மட்டுமே பேசிக்கொள்வீர்கள். அவரின் லேசான புன்னகை உங்களுக்கு நிறைய எனர்ஜியை கொடுக்கும்.
இருவரும் ஒரே மாதிரி பேசுவீர்கள்
காதலை வெளிப்படுத்த மொழி தேவையில்லை. இருவரும் ஒரே மாதிரி பேசத் தொடங்குவீர்கள். இருவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் இருவருக்கும் பல விஷயங்கள் பொதுவாக இருக்கும். எந்த தலைப்பைப் பற்றி பேசினாலும், நீண்ட விளக்கங்கள் இல்லாமல் நீங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர்கள்.
வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்று இருக்கும்
ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். இதற்காக பதட்டமாக உணர்வீர்கள். இது ஒரு விதமான மோகத்தின் அடையாளம். அவரை பார்க்கும் போதெல்லாம் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்று உணர்வீர்கள். உங்கள் இதயத்துடிப்பு அதிகரிப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
ஒருவர் மீது ஒருவர் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள்
எப்பொழுதும் ஒருவர் மீது ஒருவர் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள். அவரை பார்த்துக் கொண்டே இருப்பது உங்களுக்கு எந்த வகையிலும் சலிப்பை ஏற்படுத்தாது. நண்பர்களுக்கு மத்தியில் இருக்கும் போது கூட உங்களின் பார்வை அவர் மீது எப்பொழுதும் இருக்கும். இது உங்களுக்கும் அவருக்கும் வலுவான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பதை காட்டுகிறது.
உடல் மொழி அசைவுகள் பேசும்
பேசுவதற்கு வார்த்தைகள் இல்லாவிட்டாலும் உங்கள் உடல் மொழி அசைவுகள் பேசத் துவங்கும். உங்கள் உடல் மொழி அசைவுகளே சத்தமாக பேசத் துவங்கும். அவர் கண்களைப் பார்த்துக் கொண்டே இருக்க நேரிடும். ஒருவரை ஒருவர் கண்கள் வழியாகவே நிறைய பரிமாறிக் கொள்வீர்கள். ஆழமாக சுவாசிக்க ஆரம்பிப்பீர்கள். உங்கள் கண்கள் பெரிதாகும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
அடுத்த சந்திப்பு பற்றிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்
அடுத்த அவரை சந்திக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கும். இதற்காக நிறைய திட்டமிடுவீர்கள். அவர்களைச் சுற்றி இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். அவருடன் இருப்பது உங்களுக்கு நேரம் போவதே தெரியாது.
சின்ன சின்ன விஷயங்களை கூட அவர்களுக்காக செய்வீர்கள்
அவர் அணிந்திருக்கும் புதிய ஷர்ட்டை பார்த்து பாராட்ட ஆரம்பிப்பீர்கள். அவரின் புதிய ஹேர் கட்டை கவனிப்பது, அவருக்கு பிடித்த விஷயங்களை நினைவில் வைத்து இருப்பது போன்ற விஷயங்களை செய்வீர்கள். இப்படி இப்படி சின்ன சின்ன விஷயங்களைக் கூட கவனிக்க ஆரம்பிப்பீர்கள்.
தவிர்க்க முடியாத பாலியல் ஈர்ப்பு இருக்கும்
காதலில் காமமும் பிண்ணிப் பிணைந்தது. எனவே அவரை பார்க்கும் போது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும். இதனால் உடல் ஈர்ப்பு மற்றும் பதற்றம் போன்றவை ஏற்படும். அவருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.



Click it and Unblock the Notifications