Latest Updates
-
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
திருமண வாழ்க்கை குடும்பத்தால் எப்படி மகிழ்ச்சியற்றதாக மாறலாம் தெரியுமா? உங்களுக்கும் இந்த நிலை வரலாம்!
வெளிநாடுகளைப் போல அல்லாமல் இந்தியாவில் திருமணம் என்பது உங்கள் துணையுடன் அவர்களின் மொத்த குடும்பத்தையும் ஏற்றுக்கொள்வதாகும்.
வெளிநாடுகளைப் போல அல்லாமல் இந்தியாவில் திருமணம் என்பது உங்கள் துணையுடன் அவர்களின் மொத்த குடும்பத்தையும் ஏற்றுக்கொள்வதாகும். நீங்கள் உங்கள் துணையுடன் மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தினர் அனைவருடனும் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.

உங்கள் வாழ்க்கைத்துணையின் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் நீங்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் அவர்களின் தேவைகளை எப்போதுமே கருத்தில் கொள்ள வேண்டியது மட்டுமல்லாமல், உங்கள் தனிப்பட்ட இடம் மற்றும் நேரத்தையும் இழக்க நேரிடுவதால் இது மிகவும் வெறுப்பாக இருக்கும். உங்களுக்காக நேரத்தை ஒதுக்காத குடும்பத்தின் அனைத்து கோரிக்கைகளுக்கும் நீங்கள் ஆமோதிக்க வேண்டும். அதிலும் காதல் திருமணமாக இருந்தால் இருமடங்கு சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியத் திருமணங்கள் குடும்பத்தால் எப்படி பாதிக்கப்படுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

திருமண கனவுகள்
நீங்களும் உங்கள் மனைவியும் ஒரு குறிப்பிட்ட வழியில் திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும், உங்கள் குடும்பங்கள் இருவரும் திருமணம் எப்படி, எங்கு தொடங்குவது என்பது குறித்த அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களைப் பற்றி மோதிக் கொள்வார்கள். ஒரு திருமணமானது ஒரு ஜோடியின் வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும், மேலும் அவர்களின் விருப்பம், ஆசை மற்றும் முடிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்திய திருமணங்களில் பெரும்பாலும் பெற்றோர்களின் விருப்பப்படியே அனைத்தும் நிகழ்கிறது. பெரும்பாலும் ஆரம்பக் கட்டத்தில் பெற்றோர்களே தங்களுக்குள் ஏற்படும் முரண்களால் திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர்.

தொடர்ச்சியான குறுக்கீடுகள்
திருமணத்திற்குப் பிறகும், இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் புதுமணத் தம்பதிகள் எப்படி சமைக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள் அல்லது தூங்குகிறார்கள் என்பதில் தலையிடுகிறார்கள். மருமகளுக்கு வீட்டு வேலைகளை கடமையாக்குவது பற்றி முன்கூட்டியே யோசிப்பதோடு மட்டுமில்லாமல், இந்த பெண்கள் வீட்டு வேலைகளையும், அலுவலக வேலைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள்வதே இல்லை.

தனிப்பட்ட சுதந்திரம் இருப்பதில்லை
நீங்கள் ஒரு இந்திய குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளும்போது, தனிப்பட்டசுதந்திரத்தைப் பற்றி அனைத்தையும் மறக்கத் தயாராக இருங்கள். "நீங்கள் குழந்தைக்கு எப்போது திட்டமிடுகிறீர்கள்?" போன்ற கேள்விகள் எப்போதும் உங்களை விரட்டிக் கொண்டிருக்கும். அல்லது "உங்கள் திருமணத்தில் நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்களா?" என்ற கேள்வி உங்களிடம் வரலாம். இவை மிகவும் வெறுப்பேத்தக் கூடியவையாக இருக்கும், குறிப்பாக இந்த முக்கியமான விஷயங்கள் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலானவிஷயங்களாக இருக்கும்போது, அனைவரும் அதைப்பற்றி விவாதிப்பது எரிச்சலை ஏற்படுத்தும்.

அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது
உங்களிடம் ஒரு தனி வங்கிக் கணக்கு அல்லது உங்கள் தந்தை வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட பிற நிதி முதலீடுகள் இருந்தாலும், அவற்றை உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் அவர்களது முழு குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ள நேரிடும். உங்கள் பண விஷயங்கள் அனைத்தையும் உங்களின் செலவுகள் அனைத்தையும் பகிர வேண்டுமென்று உங்கள் மாமியார் எதிர்பார்க்கலாம். சில சமயங்களில், பெண் தன் கணவனை விட அதிகமாக சம்பாதித்தால், கணவனின் குடும்பத்தினரிடமிருந்து அவதூறுகள் மற்றும் கோபங்களைக் சம்பாதிக்கக் கூட வாய்ப்புள்ளது.

முடிவில்லா எதிர்பார்ப்புகள்
ஒரு இந்திய குடும்பத்தில் திருமணம் செய்யும்போது நீங்கள் பல எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் சொந்த தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் எதிராகச் செல்வதாக இருந்தாலும், உங்கள் மாமியார் எதிர்பார்ப்புகளை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறீர்கள். நீங்கள் மறுப்பைக் கூட காட்ட முடியாது, ஏனென்றால் பெரியவர்களின் விருப்பங்களை கடைபிடிக்காததற்காக நீங்கள் இழிவாகப் பார்க்கப்படுவீர்கள். இத்தகைய கடுமையான எதிர்பார்ப்புகளின் கீழ் வாழ்வது ஒரு திருமணத்தை அதன் மகிழ்ச்சியையும்கெடுக்கும்.



Click it and Unblock the Notifications
