Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஆண்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க திருமண வாழ்க்கையில் நரகத்தை அனுபவிக்கிறாங்கனு அர்த்தமாம்...!
நீங்கள் நினைத்து பார்ப்பதற்கு எதிர்மறையாக உங்கள் திருமண வாழ்க்கை அமைந்தாலோ அல்லது பிடிக்காத ஒருவருடன் திருமணம் நடந்தாலோ உங்கள் வாழ்க்கை நரகமாக மாறும்.
திருமண வாழ்வு என்பது ஒரு அற்புதமான உணர்வு என்பதில் சந்தேகமில்லை. கொண்டாட்டங்கள், சிரிப்பு மற்றும் நம் வாழ்க்கையை இன்னொருவருடன் கழிக்கும் உற்சாகம் என பல உணர்வுகள் இல்லற வாழ்வில் இருக்கும், ஆனால் நேரத்தில் திருமணம் உற்சாகமாகவும், பயமாகவும் உணர வைக்கும்.

நீங்கள் நினைத்து பார்ப்பதற்கு எதிர்மறையாக உங்கள் திருமண வாழ்க்கை அமைந்தாலோ அல்லது பிடிக்காத ஒருவருடன் திருமணம் நடந்தாலோ உங்கள் வாழ்க்கை நரகமாக மாறும். ஒரு ஆண் மகிழ்ச்சியற்ற திருமணத்தில் இருந்தால் அது அவர்களின் அனைத்து செயல்களிலும் வெளிப்படும். ஒரு ஆண் மகிழ்ச்சியற்ற திருமணத்தில் இருக்கிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மனைவியை விட்டு வெளியேறுவது குறித்து அடிக்கடி கிண்டல் செய்வது
இது சிலமுறை நடக்கும்போது அதனை சாதாரணமானத என்று நினைக்கலாம், ஆனால் அடிக்கடி நடக்கும்போதே அப்படி நினைக்கக்கூடாது . ஒரு மனிதன் தனது மனைவியை விட்டு வெளியேறுவதைப் பற்றி அடிக்கடி நகைச்சுவையாகக் கூறினால், அவர்து மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது, அது நகைச்சுவை மூலம் வெளிப்படுத்துகிறது, அது குறைவான தீவிரமானதாகவோ அல்லது சிக்கலாகவோ இருக்கலாம்.

மனைவியுடன் வீட்டிலிருப்பதை தவிர்ப்பது
பெண்கள் செய்வது போலவே, வீட்டில் உண்மையிலேயே மகிழ்ச்சியற்ற ஒரு ஆண் நீண்ட நேரம் வேலையில் செலவிடுவான் அல்லது வீட்டிலிருந்து விலகி இருக்க புதிய காரணங்களைக் கண்டுபிடிப்பான். வார இறுதியில் கூட, அவர் தனது மனைவியுடன் நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்க வேறு காரணங்களை தேடுவார்.

மற்றவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறுவார்கள்
இதைச் சொல்லும் ஒரு ஆண், திருமணம் செய்துகொண்டதன் மூலம் தான் தவறு செய்ததாக மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார். அது அவ்வாறு இல்லையென்றால், அவர்கள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று மற்றவர்களிடம் சொல்வதற்கு வேறு எந்த காரணமும் இல்லை.

எப்போதும் மனைவியைப் பற்றி குறைகூறுவது
அவருடைய பழக்கவழக்கங்கள், அவரது சமையல், அவரது உடை அல்லது அவளரின் குறட்டை போன்றவையாக இருந்தாலும் - திருமணத்தில் மகிழ்ச்சியற்ற ஆண்கள் தங்கள் மனைவிகள் உணர்வுபூர்வமாக அல்லது அறியாமலே செய்யும் எல்லாவற்றையும் பற்றி புகார் கூறுகிறார்கள். அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியற்றவர்களாகவும் பரிதாபகரமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்றாகும்.

தன்னுடைய செல்வத்தைப் பற்றி பெருமையாகக் கூறுவது
ஆண்கள் தங்கள் வாழ்க்கையை அற்புதமாக்கும் விஷயங்களைப் பற்றி பேசுவதற்கும் பெருமை பேசுவதற்கும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மனைவியைப் பற்றி குறிப்பிடாமல் மற்றவற்றைப் பற்றி பெருமையாகக் கூறுவார்கள். அதற்கு காரணம் அவர்கள் தங்கள் மனைவியை முக்கியமானவராகப் பார்க்காததுதான்.

அவரிடம் பழைய அரவணைப்பு இல்லாமல் போவது
நீங்கள் ஒரு மகிழ்ச்சியற்ற திருமணத்தில் இருக்கும்போது, உங்களிடம் இருந்த காதல் தீப்பொறி மங்கியிருக்கும். மேலும் அவரை நீண்ட காலமாக அறிந்திருந்தால், அவருடைய அணுகுமுறை அல்லது நடத்தைகளில் மாற்றங்களைக் கண்டறிவது உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.

மனைவியின் முன் அமைதியாக இருப்பது
ஒரு ஆண் திருமணத்தில் மகிழ்ச்சியற்றவனாக இருப்பதற்கு இது மிகப் பெரிய குறிகாட்டியாகும். மனைவி அருகில் இருக்கும்போது அவர் இயல்பாக நடந்து கொள்ளாவிட்டாலோ அல்லது மிகவும் அமைதியாகவோ இருந்தால் அவர் நிச்சயமாக திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications
