Just In
- 1 hr ago
ஜூலை மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
- 1 hr ago
உங்க சமையலறை வேலையை எளிதாக்கும் இந்த பொருட்களை நம்ப முடியாத தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்குங்கள்!
- 1 hr ago
இரவில் உங்களுக்கு தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதுக்கு நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago
இந்த 5 ராசிக்காரங்க உங்கள காதலிச்சாலும் அதை வெளிய சொல்ல மாட்டாங்களாம்... நீங்களாதான் புரிஞ்சிக்கணும்!
Don't Miss
- Technology
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- Automobiles
இந்த காருக்கு இவ்ளோ பெரிய வரவேற்பா? அதுக்குள்ள இத்தன பேருக்கு டெலிவரி பண்ணீட்டாங்களா? என்னங்க சொல்றீங்க?
- News
ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த நண்பனை கொலை செய்த இளைஞரின் ஆயுள் சிறை ரத்து.. சென்னை ஹைகோர்ட்
- Movies
டிஆர்.,ஆ இது?...என்ன இப்படி ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டார்...சிம்பு வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ
- Finance
பாகிஸ்தான் திவாலாகிறதா.. கொடூரமான பணவீக்கம், கரன்சி வீழ்ச்சி தான் காரணமா?
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Sports
"ஐயோ.. அந்த 4 பேரு பயங்கரம் ஆச்சே" இங்கி, டெஸ்டில் இந்தியாவுக்கு இருக்கும் ஆபத்து.. தப்பிக்குமா??
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
நீங்க கள்ள உறவில் இருந்ததை உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட எப்படி சொல்லலாம் தெரியுமா?
திருமண உறவில் பல்வேறு சிக்கல்களும் முரண்களும் இருப்பதால், திருமணத்திற்கு புறம்பான உறவுகள் அதிகமாக உருவாகின்றன. திருமண உறவில் மகிழ்ச்சியாக உள்ள பலரும் கூட கழல் உறவில் ஈடுபடுகிறார்கள். இது அவர்களின் திருமண உறவில் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். ஆதலால், திருமணத்திற்கு புறம்பான உறவை முறித்துக்கொண்டு, உங்கள் துணையோடு வாழ ஆசைப்படலாம். ஒரு உறவில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க நீங்கள் விரும்பலாம். நீங்கள் உங்கள் துணையை ஏமாற்றிவிட்டீர்கள் என்று அவர்களிடம் ஒப்புக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் நம்பிக்கையின் பிணைப்பு மேலும் உடைந்து விடாமல் தடுக்க, அவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம்.
சில நேரங்களில், மக்கள் தங்கள் கூட்டாளரிடம் வாக்குமூலம் கொடுப்பதைத் தவிர்க்கிறார்கள். ஏனெனில் இந்த சூழ்நிலையை எவ்வாறு அணுகுவது என்று அவர்களுக்குத் தெரியாது. ரகசியங்களை வைத்திருப்பதை விட உண்மையை பேசுவது எப்போதும் சிறந்தது. நீங்கள் இதேபோன்ற சூழ்நிலையில் சிக்கியிருந்தால், உங்கள் துணையை ஏமாற்றியதை ஒப்புக்கொள்ள சில மென்மையான வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உங்கள் துணையிடம் சொல்ல வேண்டுமா?
நீங்கள் சரியான காரணங்களுக்காக இதைச் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில சமயங்களில், ஏமாற்றியவர்கள் தங்கள் கூட்டாளர்களிடம் ஒப்புக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் நன்றாக உணரவும், தங்கள் குற்றத்தை எளிதாக்கவும் முடியும். குற்ற உணர்வில் உங்க துணையோடு வாழ்வதற்கு உண்மையை கூற உங்கள் மனம் விரும்பலாம். உங்கள் துணைக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டுமானால், சரியான வழியில் இதை கூற வேண்டும்.

நேரத்தையும் தேதியையும் தேர்வு செய்யவும்
முதலில், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உரையாடலைத் தொடங்க வேண்டாம். உங்கள் பங்குதாரர் எப்போது முழுமையான உரையாடலைப் பெறுவார் என்று கேட்பதன் மூலம் நீங்கள் உங்கள் உரையாடலை தொடங்க ஆரம்பிக்கலாம். மத்தியிலோ அல்லது நீங்கள் இருவரும் வேலையில் இருக்கும்போது இதைப் பற்றி பேச நினைக்காதீர்கள். இதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி மனம் விட்டு உங்கள் துணையிடம் பேசுங்கள்.

உண்மையை விட்டுவிடாதீர்கள்
செய்வதை விட சொல்வது எளிது. ஆனால் உங்கள் துணையை ஏமாற்றியதாக நீங்கள் ஒப்புக்கொண்டால், அவருடன் முற்றிலும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பது அவசியம். உங்கள் பங்குதாரர் பல கேள்விகளை உங்களிடம் கேட்கலாம். அது எவ்வளவு வேதனையாக இருந்தாலும் நீங்கள் உண்மையாக பதிலளிக்க வேண்டும். உங்கள் மேல் அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை வரும்படி உங்களுடைய பதில்கள் இருக்க வேண்டும்.

உங்கள் பங்குதாரர் சொல்வதைக் கேளுங்கள்
நீங்கள் சொல்ல வேண்டிய அனைத்தையும் பற்றி உங்கள் துணையிடம் பேசிய பிறகு, உங்கள் கூட்டாளருக்கு எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள நேரம் கொடுங்கள். உங்களை புரிந்துகொள்வதற்கும், பகுப்பாய்வு செய்யவும் அவர்களுக்கு நேரத்தையும் இடத்தையும் கொடுங்கள். பின்னர் அவர்கள் தங்கள் விரக்தியை உங்களிடம் வெளிப்படுத்தும்போது, அமைதியாகவும் பொறுமையாகவும் இருங்கள். அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.

விவரங்களைத் துல்லியமாக வைத்திருங்கள்
தேவையில்லாமல் ஒரு உண்மையை முழுவதுமாக நீட்டிக்க வேண்டாம். "நாங்கள் பரஸ்பர நண்பர்கள் மூலம் சந்தித்தோம்" போன்ற சுருக்கமாகவும் குறைவாகவும் உங்கள் துணையிடம் கூறுங்கள். உங்கள் பங்குதாரர் மேலும் அறிய விரும்பினால், விவரங்களை மட்டும் தெளிவுபடுத்துங்கள்.

தற்காப்பு கொள்ள வேண்டாம்
உங்கள் செயல்களுக்கு நீங்கள் கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும். உங்களை எந்த வகையிலும் தற்காத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், இங்கு தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டாம். ஆனால் இதுபோன்ற பாதிக்கப்படக்கூடிய நேரத்தில் உங்கள் துணையை ஆதரிப்பதில் கவனம் செலுத்துங்கள்.