Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா?
கள்ளக்காதலுக்கு இடைஞ்சலா இருந்த 3 வயது மகனை ஊசிபோட்டு கொன்ற நர்ஸ் தாய்... இப்படியும் செய்வாங்க?
ஒரு நர்ஸ் தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருக்கும் 3 வயது மகனை ஊசிபோட்ட கொன்ற கதை பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம். அந்த கதையை விளக்கமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களாக திருமணத்தைத் தாண்டிய தன்னுடைய கள்ளக் காதலின் மோகத்தினால் தன்னுடைய கட்டிய கணவனையும் தான் பெற்றெடுத்த பிள்ளைகளையும் கூட கொலை செய்யுமளவுக்கு பெண்கள் துணிந்து விட்டார்கள். அந்த அளவுக்கு காதல் அவர்களுடைய கண்ணை மறைத்து விடுகிறது.

உண்மையிலேயே முழு மனதுடன் தான் அவர்கள் இதுபோன்ற தவறுகளைச் செய்கிறார்களா? அல்லது வீடு மற்றும் சமூகத்தின் மேல் உள்ள கோபம் இவர்குளை இப்படி செய்ய வைக்கிறது என்பது போன்ற எண்ணற்ற சந்தேகங்கள் உளவியலாளர்களுக்கு எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.

என்ன நடந்தது?
ஒரு நர்ஸ் தன் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருக்கு கையில் 3 வயது உடைய மகன் இருக்கிறார். சில காலங்களாக வேறு நபர் மீது காதல் கொண்ட அந்த நர்ஸ் பெண்மணி தன்னுடைய மகனுக்கு விவரம் தெரிய ஆரம்பித்துவிட்டது. அதனால் காதலன் வீட்டுக்கு வருவதற்கு இடைஞ்சலாக இருக்கிறான் என்பதால் ஊசி போட்டு கொன்று விட்டார். இப்படியுமா பெற்ற தாயால் இருக்க முடியும் என்பது தான் புரியவில்லை. அது பற்றி விளக்கமாகக் கீழே பார்க்கலாம்.

சென்னை அபிராமி
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையைச் சேர்ந்த அபிராமி என்னும் பெண் பிரியாணி கடையில் வேலை பார்க்கும் நபர் ஒருவர் மீது இருந்த தகாத உறவால், தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கொல்ல முயற்சித்து விஷம் வைத்துக் கொன்றதும் கள்ளக்காதலனுடன் தப்பி ஓடியதும் பின் தமிழ்நாட்டையே உலுக்கியது. அந்த சோக சம்பவத்தை நாம் மறப்பதற்கு முன்னதாகவே இதுபோன்ற மற்றொரு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன தான் நடந்தது? வாங்க பார்க்கலாம்.

காதல் திருமணம்
தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் தான் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் பக்கத்து ஊரில் வசித்து வந்த சரவணன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). என்னும் இளைஞருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் ஆறு ஆண்டுகள் காதலித்து பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்று திருமணம் செய்து கொண்டனர்.

மூன்று வயதில் மகன்
இவர்கள் இருவரும் திருமணத்துக்குப் பின் பக்கத்து கிராமத்திலேயே தனிக்குடித்தனம் போய் விட்டனர். திருமணம் ஆகி முதல் வருடத்திலேயே அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார் சாந்தி. குழந்தையும் வளர ஆரம்பித்தது. குழந்தைக்கு மூன்று வயது ஆனது.

கருத்து முரண்பாட்டால் பிரிவு
இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் இருந்தது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வரத் தொடங்கியிருக்கின்றன. இதனால் இருவரும் பரஸ்பரம் இனி சேர்ந்து வாழ முடியாது என்று பிரிந்து விட்டனர். சரவணன் தன் பெற்றோருடன் சென்றுவிட குழந்தையுடன் சாந்தி வெளியே வந்துவிட்டார்.

நர்ஸ் வேலை
தன்னுடைய மூன்று வயது குழந்தையுடன் தன்னுடைய தாய் வீட்டுக்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தார் சாந்தி. இந்நிலையில் தன்னுடைய கிராமத்துக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் பணியில் இருந்து வந்திருக்கிறார்.

கள்ளக்காதல்
இப்படி நர்ஸ் வேலைக்குச் சென்று வருகையில் தான் வேலை பார்க்கும் ஊரில் உள்ள சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்பவர் மீது மீண்டும் காதல் மலர்ந்துள்ளது. இவர்களுடைய காதல் முற்ற ஆரம்பித்ததும் தன்னை அழைத்துச் சென்றுவிடும்படியும் நாம் புது வாழ்க்கையைத் தொடங்கலாம் என்றும் சாந்தி சுரேஷிடம் சொல்லியிருக்கிறார்.

அவன் போட்ட கண்டிஷன்
நான் உன்னை திருமணம் செய்து கொள்ளத் தயார். ஆனால் உன்னுடைய முதல் கணவனுக்கு பிறந்த குழந்தையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவனை ஏதாவது செய்துவிட்டு நீ மட்டும் வா. இல்லையென்றால் கொன்றுவிடு. நாம் வேறு ஏதாவது ஊருக்குப் போய் புது வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று கண்டிஷன் போட்டிருக்கிறான்.

விஷ ஊசி
இந்த கண்டிஷனை ஏற்றுக் கொண்ட சாந்திக்கு தான் நர்ஸாக இருந்தது குழந்தையைக் கொல்வதற்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்து, தான் பத்து மாதம் பெற்ற மூன்று வயது மகனுக்கு விஷ ஊசி போட்டுவிட்டார். குழந்தை வித்தியாசமாக அழுததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வந்து கேட்டதற்கு அவனுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லியிருக்கிறார்.

இறந்து போன குழந்தை
இதைக் கேட்ட அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு, பக்கத்து ஊரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டிருந்ததாகக் கூறியிருக்கின்றார்.

புகாரும் வழக்கும்
உடனே அந்த ஊர் வருவாய் அதிகாரியிடம் முறையிட்டு வழக்குப் போட வைத்திருக்கின்றனர். விசாரணையின் இறுதியில் தன்னுடைய காதலுக்காக இப்படி செய்து விட்டதாக சாந்தி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். என்னதான் காதல் கண்ணை மறைத்தாலும் தான் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை எப்படித்தான் கொல்ல மனசு வருகிறதோ தெரியவில்லை. காலம் தான் இதுபோன்ற கொடுமைகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications