ஆண்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?

காதல் என்பது அழகானது. ஒருவரின் இன்பம் மற்றும் துன்பத்தை பகிர்ந்து கொள்ள இன்னொருவர் தேவை என்பதை உணர்த்துவது காதல். காதல் ஆழமானது.

By Mahibala

காதல் என்பது அழகானது. ஒருவரின் இன்பம் மற்றும் துன்பத்தை பகிர்ந்து கொள்ள இன்னொருவர் தேவை என்பதை உணர்த்துவது காதல். காதல் ஆழமானது. காதலில் மிகவும் முக்கிய அம்சம் நம்பிக்கை. ஒருவர் மீது மற்றொருவர் அதிக நம்பிக்கையுடன் இருத்தல் அவசியம்.

Mens Extra Marital Affair

அதே சமயம் அந்த நம்பிக்கைக்கு ஏற்ற விதத்தில் இருவரும் நடப்பது அதை விட மிகவும் முக்கியம். இந்த நம்பிக்கை என்பது காதலில் மட்டும் அல்ல எல்லா உறவுகளிலும் அதிகம் தேவைப்படும் ஒரு அம்சமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகாத உறவு

தகாத உறவு

"நான் இன்னொரு நபருடன் தொடர்பில் இருக்கிறேன்" என்று யாருமே தன் துணையிடம் சொல்வதில்லை. ஆனால் பெண்கள் சாமர்த்தியசாலிகள். ஒரு ஆண் தன் நேர்மையான வழியில் இருந்து விலகி நடக்கும்போது, அவன் விட்டுச் செல்லும் சுவடை ஆராய்ந்து அவனின் தீய தொடர்பை புரிந்து கொள்வாள் பெண்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

உறவுகள் தனித்தன்மை பெற்றவை. குறிப்பாக ஒவ்வொரு கணவன் மனைவி உறவும் வெவ்வேறு தன்மை கொண்டிருக்கும். உங்கள் கணவரின் பல அறிகுறிகள் அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதை உறுதி செய்தாலும், அவர் உங்களிடம் நாணயமானவராகவே நடந்து கொள்ள முயற்சிப்பார். ஆனால் அது உண்மையில்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தோற்றம்

தோற்றம்

எப்போதும் உங்கள் கணவர் அவரின் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம். திடீரென்று சில நாட்களாக மிகவும் அழகான உடையில் தோன்றினால் சற்று எச்சரிக்கை அவசியம். இதுவே உங்கள் கணவருக்கு வேறொரு தொடர்பு உள்ளது என்பதற்கான முதல் அறிகுறியாகும்.

உங்கள் கணவர், அழகான உடை அணிந்து கொள்ளவும், தனது தலை முடியில் வேறு ஸ்டைல் மாற்றிக் கொள்ளவும் மிகவும் ஆவலாக இருப்பார். நிறைய புதிய ஆடைகள் வாங்குவதும், எந்த நேரமும் கண்ணாடி முன் நிற்பதும் அவரின் புதிய பழக்கமாக இருக்கலாம்.

திடீரென்று உடல் ஆரோக்கியத்தின் மேல் அதிக கவனம் செலுத்தலாம். நீங்கள் அவர் உடற் பயிற்சி செய்து பார்த்திருக்காத இத்தனை ஆண்டுகளில், இப்போது, நீண்ட நேரம் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமான பயிற்சிகளை மேற்கொள்வதை பார்த்து நீங்கள் வியக்கலாம்.

வேலைக்கு செல்லும்போது உங்கள் கணவர் எப்போதும் இல்லாமல், இப்போது மிகவும் சிறப்பாக உடையணிந்து சென்றால், அவருடைய பணியிடத்தில் சக பணியாளரை கவரும் நோக்கமாக இருக்கலாம். அல்லது, நீண்ட நேரம் ஜிம்மில் பயிற்சி செய்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ளும் ஆர்வம் தோன்றினால், அவருடைய புதிய தொடர்பு, அவரை இன்னும் சிறப்பான வடிவத்தில் இருக்க வைக்கிறது என்பதை நீங்கள் உணரலாம். அல்லது ஜிம்மில் கூட அவருக்கு நெருக்கமாக யாரவது இருக்கலாம்.

உணர்ச்சி வசப்படுவது

உணர்ச்சி வசப்படுவது

உங்கள் கணவர் உங்களிடம் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு கோபம் கொள்வது அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதை வெளிபடுத்தும் அறிகுறியாகும். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களிடம் அவரின் நேரத்தையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடியாமல் உங்களிடம் அவர் கோபம் கொள்ள நேரலாம். இதற்கு முன்னால் அவர் உங்களிடம் காட்டிய நெருக்கம் இப்போது குறைந்தது போல் உங்களுக்கு தோன்றலாம். அந்த நெருக்கத்தை அவர் தற்போது வேறொரு பெண்ணிடம் காட்டலாம்.

உங்கள் கணவர் உங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதை பற்றி ஒரு குற்ற உணர்வோடு இருக்கலாம். அதனால் உங்களிடம் அதிக ஈடுப்பாட்டை காட்டாமல் சற்று விலகி இருக்க நினைக்கலாம்.

குண மாற்றம்

குண மாற்றம்

உங்கள் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தால், மன அழுத்தம் உண்டாகி அவர் உங்களிடம் அதிகம் கோபப்படலாம்.

இரண்டு உறவையும் சம நிலையில் வைக்க முடியாத காரணத்தால் நீங்கள் அவருடன் சண்டையிடும் சூழ்நிலையை உண்டாக்கி, அவர் வாழ்வில் நடந்த எல்லாவற்றிற்கும் நீங்கள் தான் காரணம் என்று உங்கள் மேல் பழி போடலாம்.

உங்கள் மேல் அவர் பார்வையில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணர முடியும். திடீரென்று உங்களை தொட்டதற்கெல்லாம் விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். நீகள் ஆடை உடுத்தும் விதம், நீங்கள் பேசும் விதம், போன்றவை அவருக்கு பிடிக்காமல் போகலாம். உங்கள் எடை அதிகரிப்பு அல்லது உங்கள் வடிவ மாற்றங்கள் போன்றவற்றை விமர்சித்து உங்களை கவலை கொள்ளச் செய்யலாம். நீங்கள் வீட்டை நிர்வகிப்பது பற்றி கேலி செய்யலாம்.

ரகசியமான மனிதர்

ரகசியமான மனிதர்

அவரின் ரகசிய செய்கைகள் அவர் மாற்றத்தை உங்களுக்கு உணர்த்தலாம். அலைபேசி அழைப்பு வந்தால் வீட்டில் இருக்கும் அதிக சத்தம் காரணமாக அதை எடுத்துக் கொண்டு வேறு இடத்தில் சென்று பேசுவது ஒரு தவறு இல்லை. ஆனால் எல்லா அழைப்பிற்கும் இதே முறையை பின்பற்றினால் அது சந்தேகத்தை உருவாக்கும். அப்படி நிகழ்ந்தால், அவர் உங்கள் முன், பேசுவதை தவிர்க்கிறார் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒவ்வொரு முறை அலைபேசி அழைக்கும்போதும், ஓடிச் சென்று போனை ஆன் செய்து, வேறு ஒரு அறைக்கு அல்லது வீட்டின் மற்ற பகுதிகளுக்கு சென்று பேசலாம்.

உங்கள் கணவர் அலைபேசிக்கு பாஸ்வர்ட் போட்டு லாக் செய்யலாம். அந்த பாஸ்வர்ட் என்ன என்பதை உங்களுக்கு பகிராமல் இருக்கலாம். இதற்காக அவர் கூறும் காரணங்கள் மிகவும் போலியானவையாக இருக்கலாம். அலுவலக மின்னஞ்சல் மிகவும் முக்கியமானது என்று கூறலாம். அலுவலக விஷயங்கள் தொடர்பான தகவல்கள் போனில் இருப்பதாக கூறலாம்.

வீட்டில் இருந்து வெளியில் செல்லவும், உங்களை விட்டு விலகி இருக்கவும் எப்போதும் எதாவது ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆபிசில் அதிக வேலை , ஜிம்மில் கடுமையான பயிற்சி என்று எதாவது ஒரு காரணத்தைக் கூறி உங்களைத் தவிர்க்கலாம். புதிய பழக்கத்தை ஏற்படுத்தி அதில் நேரத்தை செலவு செய்யலாம். எது எப்படி இருந்தாலும் அவருடைய எண்ணம் உங்களை விட்டு, உங்கள் வீட்டை விட்டு விலகி இருப்பது மட்டுமே. தொடக்கத்தில் மிகக் குறைந்த அளவு மட்டுமே வீட்டை விட்டு செல்லும் அவர், அந்த உறவில் ஆழமாக இறங்கும்போது உங்களை முற்றிலும் புறக்கணிக்கலாம்.

தொடர்பு கொள்வது

தொடர்பு கொள்வது

உங்கள் துணைவர் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்தால், அவர் வெளியில் இருக்கும் நேரத்தில் அவரைத் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம்.

வேலை காரணமாக வெளியில் பயணம் செல்வதாகக் கூறலாம். எங்கு போகிறார் என்பதை சரியாக சொல்லலாம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள ஒரு எண்ணை கொடுக்காமல் போகலாம் அல்லது நீங்கள் அவரை அழைக்கும்போது அழைப்பை ஏற்காமல் இருக்கலாம்.

உங்கள் கணவர் வேறு தொடர்பில் இருக்கும்போது சில காரணங்களை உங்களுக்கு கூறலாம். "நான் மீட்டிங்கில் இருப்பேன். அதனால் உன் அழைப்பை ஏற்க முடியாது. நானே உன்னை அழைக்கிறேன்" போன்ற வாக்குறுதிகளை கொடுக்கலாம். அல்லது "இந்த வார இறுதியில் நான் முக்கியமான வேலையாக செல்கிறேன். அதனால் நீ எண்ணெய் அழைக்க வேண்டாம்" என்று கூறலாம்.

பாசமாக மாறுவார்

பாசமாக மாறுவார்

திடீரென்று உங்கள் கணவர் உங்கள் மேல் அன்பு மழை பொழியத் தொடங்குவார். அவர் உங்களை ஏமாற்றுவதால் உண்டாகும் குற்ற உணர்ச்சியைக் குறைக்க இப்படி நடந்து கொள்வார்.

உங்கள் துணைவர் உங்களுக்கு பரிசு, பூக்கள் என்று பல பொருட்களை கொடுத்த வண்ணம் இருப்பார், குறிப்பாக மற்றவர்கள் முன்னிலையில். சில நேரம், இதற்கு மாற்றாக அவர் உண்மையிலேயே அவருடைய அன்பை வெளிபடுத்தும் விதமாகவும் இதனைச் செய்யலாம்.

உங்கள் கணவர் உங்களுக்கு பரிசு பொருட்கள் தருவது மட்டுமல்ல, உங்களுடன் அதிக நேரம் செலவழிக்கத் தொடங்குவார். அதிக நேரம் உங்களுடன் இல்லாவிட்டாலும், இருக்கும் நேரத்தில் உங்களிடம் அன்பாகப் பழகுவார்.

உள்மனசு

உள்மனசு

ஒரு பெண்ணாக, மனைவியாக உங்கள் கணவரைப் பற்றிய உங்கள் உள் மனம் தெரிவிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் சரியானவையாக இருக்கக்கூடும். நீங்கள் பொறாமைக் குணம் இல்லாதவராக, எதையும் தவறாக நினைக்கக்கூடியவராக இல்லாதவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் உள்மனம் சொல்லும் உங்கள் கணவரின் மாற்றங்களைப் பற்றிய உண்மைகளை கவனிக்கத் தவற வேண்டாம்

உங்களுக்கு திருமணமாகி நீண்ட காலம் ஆகி இருந்தால், உங்கள் கணவரைப் பற்றி முழுவதும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.

பாலியல் தொடர்பு

பாலியல் தொடர்பு

கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தால் உங்களுடன் பாலியல் தொடர்பு கொள்ள விரும்பமாட்டார். முந்தைய காலங்களைப் போல் அதில் அவருக்கு விருப்பம் இருக்காது.

புதிய உறவில் ஏற்படும் சந்தோஷத்தால் அவருக்கு உங்களுடன் சந்தோஷமாக இருக்க பிடிக்காது. ஒருவேளை உங்கள் கணவர் உண்மையிலேயே சோர்வாக இருந்தால், அடுத்த சில நாட்களில் பழைய நிலைக்கு திரும்பலாம்.

ஒரு சிலர் வேறொரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பால் தன் துணையுடன் கூட அதிக விருப்பத்துடன் பாலியல் தொடர்பில் ஈடுபாடு செலுத்தலாம். ஒரு புதிய உறவில் அதிக ஆழம் பயணிக்கும்போது , ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரோன் அளவு அதிகரித்து பாலியல் விருப்பங்கள் அதிகரிக்கும்.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

உங்கள் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை நீங்கள் உணர்ந்தால் கோபப்பட்டு அதிரடி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் , ரிலாக்ஸ் செய்து கொண்டு, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசியுங்கள். கீழே கூறியுள்ளவற்றைப் படித்து சில குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த நிகழ்வுக்கான சரியான ஆதாரத்தை கண்டுபிடியுங்கள். உங்கள் கணவரிடம் இது பற்றி கேட்கும்போது மறுத்தால் அவர் கண்முன்னே அந்த ஆதாரத்தை வைத்து நிருபிக்கலாம். அவர் உங்கள் பேச்சை கவனிக்கத் தவறினால், அவர் யார் சொன்னால் கேட்பாரோ அவரிடம் இந்த செய்தியை வெளிபடுத்துங்கள்.

அவர் அந்த தொடர்பை துண்டிக்காவிட்டால், உங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்றும் உங்களுடன் குழந்தைகளை கூட்டிச் செல்வதாகவும் கூறுங்கள். பொதுவாக இந்த நிலையை எந்த ஒரு கணவனும் ஏற்க மாட்டார்கள். அவர்கள் தவறை உணர்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, May 18, 2019, 17:10 [IST]
Desktop Bottom Promotion