இந்திய நடிகைகள் இத்தாலியில் திருமணம் செய்துக் கொள்ள விரும்புவது ஏன்? - காரணங்கள்!

இந்திய நடிகைகள் இத்தாலியில் திருமணம் செய்துக் கொள்ள விரும்புவது ஏன்? - காரணங்கள்!

பெரும்பாலும் எந்த நாட்டில் வேலை செய்து வந்தாலும், வசித்து வந்தாலும், கடைசியில் திருமணம் என்றால் தங்கள் பிறந்த ஊரில் வைப்பதை தான் வழக்கமாக எல்லாரும் கொண்டிருப்பார்கள். சிலர் பிறந்த ஊரை விட்டு வந்து நிறைய ஆண்டுகள் ஆகி இருந்தால், தாங்கள் தற்சமயம் வசித்து வரும் ஊரில் திருமணங்களை நடத்துவதும் உண்டு.

ஆனால், ஏன் சமீப காலமாக இந்திய நடிகைகள் தங்கள் திருமணத்தை வெளிநாடுகளில் செய்துக் கொள்கிறார்கள். திருமணம் முடிந்து தேனிலவுக்கு வெளிநாடுகளுக்கு சென்றால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. திருமணத்தையே வெளிநாடுகளில் வைப்பது ஏன்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூட்டம்!

கூட்டம்!

பிரபலமாக இருப்பதால் நிச்சயமாக இவர்களது திருமணத்திற்கு கூட்டம் அலைமோதும். இந்தியாவின் எந்த இடத்தில் திருமணத்தை வைத்தாலும் அங்கே இவர்களது ரசிகர் கூட்டம் அலைமோதும். திருமணம் என்பது அனைவர் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு. இதை திக்குமுக்காடி போகும் அளவிற்கு கூட்ட நெரிசலில் செய்ய வேண்டுமா? என்று கருதுவார்களோ? என்று சிலர் கருதலாம்...

இல்லை! இந்திய நடிகை, நடிகர்கள் இத்தாலி போன்ற வெளிநாடுகளில் திருமணம் செய்துக் கொள்ள வேறு சில காரணங்கள் இருக்கின்றன...

அந்த காரணங்கள் என்ன? இதுவரை யாரெல்லாம் இத்தாலியில் திருமணம் செய்திருக்கிறார்கள்.....

இத்தாலி!

இத்தாலி!

ஐரோப்பியா நாடுகளில் மிகவும் அழகான நாடு இத்தாலி. உலகின் மிகச் சிறந்த சுற்றுலா பயணிகளுக்கான நாடு என்ற புகழும் கொண்டிருக்கிறது இத்தாலி. படங்கள் எடுப்பதற்கான சிறந்த லொகேஷன்கள் என்பதில் இருந்து சுவையான உணவு என்று அனைத்திற்கும் டாப் லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறது இத்தாலி.

ரொமாண்டிக்!

ரொமாண்டிக்!

ரொமாண்டிக்கான திராட்சைத் தோட்டங்கள் அல்லது வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் என எதுவாக வேண்டுமானாலும் இதற்கான காரணங்களாக இருக்கலாம். இத்தாலியின் கரையோர பகுதிகள் மிகவும் ரம்மியமான அழகுடையவை. இத்தாலியின் இயற்கை வளங்கள், எழில்மிகு காட்சியளிக்கிறது.

இயற்கை!

இயற்கை!

இத்தாலியில் திரும்பும் திசை எங்கிலும் ஆயிரக்கணக்கான அழகிய காட்சிகளை காணலாம். விதவிதமான, வண்ணமயமான பூக்கள், தோட்டங்கள், பச்சைப்பசேல் என்ற பரந்துவிரிந்த அதன் அழகியல் யாராக இருந்தாலும் ஈர்க்க தான் செய்யும். இதற்கு இந்திய நடிகர்கள், நடிகைகள் விதிவிலக்காக இருக்க முடியாது.

இதுவரை இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்ட இந்திய நடிகர், நடிகைகள்...

தீபிகா படுகோனே- ரன்வீர் சிங்!

தீபிகா படுகோனே- ரன்வீர் சிங்!

சமீபத்தில் தீபிகாவும் - ரன்வீரும் இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் இரண்டு முறையில் திருமணம் செய்துக் கொண்டதாகவும், முதலில் கொங்கனி முறையில் திருமணம் செய்துக் கொண்டனர் என்றும் தகவல்கள் வெளியாகின.

வெள்ளை ரோஜா அலங்காரம்!

வெள்ளை ரோஜா அலங்காரம்!

புதுமண தம்பதியின் ப்ரைடல் பார்ட்டியில் பங்கெடுத்துக் கொள்ள விருந்தினர்கள் படகில் சவாரி செய்து இடத்தை வந்தடைந்தனர். பெரும்பாலும் வந்திருந்த அனைத்து விருந்தினர்களும் வெள்ளை ஆடை உடுத்தி இருந்தனர். அதற்கு எடுப்பாக திருமண இடமும் வெள்ளை ரோஜாக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அனுஷ்கா ஷர்மா - விராத் கோலி!

அனுஷ்கா ஷர்மா - விராத் கோலி!

இத்தாலியில் திருமணம் என்பதை இந்தியா முழுக்க பிரபலம் அடைய செய்த ஜோடி அனுஷ்கா - விராத். நீண்ட நாள் காதலித்து வந்த இவர்கள் திடீரென தங்கள் திருமண தேதியை அறிவித்து, அவசர அவசரமாக இத்தாலி விரைந்தனர். ஆனால், இதற்கு முன்னரே அரசால், புரசலாக இவர்கள் இத்தாலியில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் கசிந்தன.

சூப்பர் ஜோடி!

சூப்பர் ஜோடி!

இந்தியாவின் சூப்பர் ஜோடியாக கருதப்படும் அனுஷ்கா - விராத் இத்தாலியின் ஆடம்பரமான போர்கோ ஃபினோச்யதோ என்ற ரிசார்ட்ல் திருமண ஏற்பாடுகள் செய்திருந்தனர். இந்த இடம் டஸ்கனி, இத்தாலியில் இருந்து வெறும் அரைமணிநேரத்தில் சென்றடைய கூடிய தூரத்தில் அமைந்திருக்கிறது.

ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா!

ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா!

ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா தங்கள் உறவை இரகசியமாக பாதுகாத்து வந்தனர். இவர்கள் திருமணமும் இரகசியமாக தான் நடந்தது. ஊடகங்களுக்கு தெரியக் கூடாது என்று இவர்கள் திட்டமிட்டிருந்தாலும். இவர்கள் திருமணம் முடிந்த வெகு விரைவில் இவர்கள் திருமண செய்திகள் ஊடகங்களின் காதுகளை எட்டின.

ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ராவின் திருமணம் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் இத்தாலியின் கிராமப்புற பகுதியான வில்லா டி'எஸ்டே என்ற இடத்தில் நடந்தது.

சர்வீன் சாவ்லா - அக்ஷை தக்கர்!

சர்வீன் சாவ்லா - அக்ஷை தக்கர்!

பாலிவுட் சினிமாவின் ஹாட்டாஸ்ட் நாயகி என்று பெயர் எடுத்தவர் சர்வீன் சாவ்லா. இவருக்கும் அக்ஷை தாக்கருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் இரகசியமாக இத்தாலியின் ஃபாரவே என்ற இடத்தில் நடந்தது. இந்த திருமண விழாவில் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டும் பங்கெடுத்துக் கண்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, November 17, 2018, 12:15 [IST]
Desktop Bottom Promotion