Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
லக்ஷ்மியை கமெண்டுகளில் கழுவி ஊற்றும் அன்பர்களே இங்க கொஞ்சம் வாங்க...
லக்ஷ்மி குறும்படம் பார்த்தீங்களா? அதுல என்ன கவனிச்சீங்க?
கௌதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்ஜுன் கே.எம் என்பவர் எழுதி, இயக்கி, செதுக்கிய (எடிட்) குறும்படமாக கடந்த நவம்பர் ஒன்றாம் நாள் யூடியூபில் வெளியாகி இருக்கிறாள் "லக்ஷ்மி". கடந்த இரு தினங்களாக ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப், மீம்ஸ் என எங்கு திரும்பினாலும் லக்ஷ்மி மயம் தான்.
தினந்தோறும் குக்கரில் துவங்கும் பிரஷர் அவளது நாள் முழுக்க நீடிப்பது தான் கதைகளம். லக்ஷ்மி, திருமணமாகி பள்ளி செல்லும் வயதில் குழந்தை இருக்கும் ஒரு நடுத்தர பெண்.

அவளது கணவனால் அவள் பெற்றது என்ன, பெறாதது என்ன? ஏழை, நடுத்தரம், மேல்தட்டு என வர்க்க ரீதியாக, வாழ்க்கை சூழல் ரீதியாக எப்படி பிரித்து பார்த்தாலும் அங்கே இப்படி ஒரு லக்ஷ்மி இருப்பாள்.
சிலர் வாய் கட்டுடன், சிலர் கால் கட்டுடன், சிலர் உடல் முழுக்க கட்டுகளுடன். தாலி எனும் அந்த முதல் கட்டுதான் லக்ஷ்மிகளின் இந்த அனைத்து கட்டுகளுக்கு ஆணிவேர் அல்லது பிள்ளையார் சுழி எனலாம்.
கமெண்ட்டுகளில் லக்ஷ்மியை வறுத்தெடுக்கும் அன்பர்களுக்கு, லக்ஷ்மி செய்தது தவறா? சரியா? என விவாதிக்கும் முன்... அவள் வாழ்வில் பெற்றது என்ன, விரும்பியது என்ன? எதிர்பார்த்தது என்ன? அதிர்ச்சியடைய செய்தது என்னென்ன? என்பது குறித்து அவளது பார்வையிலேயே நாம் காண வேண்டும்...

பிரஷர் குக்கர் வாழ்க்கை!
அனுதினமும் அதிகாலை எழுந்தது முதல், படுக்கும் வரை அவள் வாழ்க்கை முழுதும் பிரஷர் ஃபுல்லாகவே கழிகிறது. லக்ஷ்மி வீட்டில் ஒரு சமையல் காரியாக, பிள்ளையை பராமரிக்கும் ஆயாவாக, கணவனுக்கு சுகம் கொடுக்க ஒரு விலையில்லா மாதுவாக தான் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள். போதா குறைக்கு, தனது லோ மிடில் கிளாஸ் குடும்பம் சீராக பயணிக்க பிரிண்டிங் பிரஸ்க்கு வேலைக்கும் சென்று வருகிறாள்.
24x7ல் அவள் கொஞ்சம் நிம்மதியாக சுவாசிக்கும் நேரம், அந்த ரயில் பயணம் மட்டுமே.

கதாபாத்திரங்கள்...
தனது சமையல் வேலை, ஆயா வேலை, இரவு வந்ததும் விலையில்லா மாது என அனைத்திலும் தனது சோர்வை வெளிப்படுத்தாமல் அவள் முழுக்க, முழுக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்ட போதிலும், அவளுக்கு கிடைத்த சன்மானம் என்ன? கணவனுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.
அது எப்படி, ஆண்கள் கள்ள தொடர்பு வைத்துக் கொண்டால் தக்காளி சட்னி, பெண்கள் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டால் மட்டும் இரத்தமா? இரண்டுமே இரத்தம் தான்.

பழிக்குப்பழி...
கணவனின் துரோகத்தை கண்டறிந்த பிறகு ஒரு கோபத்தில், லக்ஷ்மி தவறு செய்ய தூண்டுவதாக கூறினும் கூட... அவள் காசுக்காகவோ, சுகத்திற்காகவோ செல்லவில்லை.
ஊர் முழுக்க கலவரம், போக்குவரத்து தடைப்பட்ட பிறகும் தன்னை அழைத்து செல்ல கணவன் வரவில்லை எனில்... லக்ஷ்மி கட்டுப்பாட்டுடன் அல்லவா இருந்திருக்க வேண்டும்? அவள் ஏன் கதிருடன் அவனது வீட்டுக்கு செல்ல வேண்டும். தமிழ் பெண்களுக்கு கட்டுப்பாடு தானே முக்கியம் என பல அறைகூவல் சப்தங்கள் யூடியூப் முழுக்க...

ஆண்களும் தான்...
தமிழ் பெண்கள் மட்டுமல்ல, உலகில் இருக்கும் அனைத்து பெண்களும் கட்டுப்பாட்டுடன் தான் இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான். தினந்தோறும் தனது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு கொண்டிருக்கும் லக்ஷ்மியின் கணவனை யாரும் பெரியளவில் திட்டாதது ஏன்? லக்ஷ்மி செய்தது தவறு எனில், அவளது கணவன் செய்தது என்ன தியாக செயலா?

அழகுப் படுத்துங்கள்...
பெண்களுக்கு எப்போதுமே தங்களை அழகாக பராமரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும் என நாம் காலம், காலமாக கூறி வருகிறோம். ஆம்! அவர்களுக்கு அலங்கார பொருட்கள் மீதும் அதிக ஈர்ப்பு இருக்க தான் செய்கிறது.
நீங்களே கூறுங்கள்... எந்த தாய் தனது மகனுக்கு பிடித்த பொருளோ, உணவோ வாங்கித்தர மறுத்து ஃபேர் அண்ட் லவ்லி வாங்கியிருக்கிறாள்? இப்படி ஒரு செயல் எந்த வீட்டிலும் நடந்திருக்க வாய்ப்பில்லை.

பேரின்பம்!
பெண்கள் அதிகம் எதிர்பார்க்கும் அழகு, தனது கணவனின் அன்பு, அவனது ஆசை வார்த்தைகள், அவன் தோளில் இடம் கொடுக்கும் அரவணைப்பு. ஒரு பட்டுப்புடவையோ, தங்க சங்கிலியோ கூட தராத மகிழ்ச்சியும், பேரின்பமும், நீ இன்னிக்கி அழகா இருக்கடி என கூறும் வார்த்தையிலும், சமைத்துக் கொண்டிருக்கும் போது அருகே நின்று இலகுவாய் கட்டிபிடிக்கும் அணைப்பிலும் கிடைத்துவிடும் அவளுக்கு.

லக்ஷ்மி செக்ஸ் பொம்மை அல்ல...
லக்ஷ்மியின் கணவனை பொறுத்த வரை லேத்து வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் வயிற்று பசியையும், அடிவயிற்றுப் பசியையும் தீர்க்கும் வெறும் செக்ஸ் பொம்மை தான் லக்ஷ்மி. நீ உன் அம்மா வீட்டுக்கு போ, அக்கா வீட்டுக்கு போ... பஸ், ட்ரைன் ஏதும் கிடைக்காம பிளாட்பாரத்துல கூட தூங்கு... எனக்கு நாளைக்கு காலையில சோறு வேணும்... நைட்டு என்கூட வந்து நீ படுக்கணும்.

இல்லறம் ஒரு கண்ணாடி!
இல்லறம் என்பது ஒரு கண்ணாடி. கணவன் எப்படி இருக்கிறானோ, அப்படி தான் மனைவி பிரதிபலிப்பாள். கணவன் செக்ஸ் தேடி அலைவதை கண்டுக் கொள்ளாத நாடு, பெண் தேடினால் அதை தவறு என்கிறது. தவறு தான்! ஆனால் அது இருபாலருக்கும் பொதுவாக தானே இருக்க வேண்டும்.
எந்த கொலை வழக்கிலும் ஆண் கொலை செய்தால் இந்த தண்டனை, பெண் கொலை செய்தால் இந்த தண்டனை என வேறுபாடு காண்பிக்கப்படவில்லையே. சட்டம் ஊருக்கு மட்டும் தானா? இல்லறத்திற்கு இல்லையா?

திருப்தி எது?
நான் என் மனைவியுடன் தினமும் கலவி மகிழ்கிறேன்... நான் என் மனைவிக்கு தினமும் செலவுக்கு பணம் தருகிறேன்... நான் என் மனைவிக்கு அவள் கேட்பதை எல்லாம் வாங்கி வருகிறேன்.... அவள் விரும்பும் போதெல்லாம் சினிமா, பார்க், பீச், அம்மா வீட்டுக்கு செல்ல அனுமதிப்பேன்...
இதெல்லாம் தான் லக்ஷ்மிகளை திருப்திப்படுத்தும் என நினைக்கிறீர்களா?
காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் போது அவள் நாள் முழுக்க கன்னத்தில் புன்னைகயுடன் சேர்த்து ஏந்தி மகிழ ஒரு ஆசை முத்தம். அவளுக்கு உடல் முடியாமல் போகும் போது செய்யும் சிறு, சிறு உதவிகள்... கண்களில் அவ்வப்போது வெங்காயம் தரும் அளவிற்காவது கொஞ்சம் ஆனந்த கண்ணீர். இவை தான் ஒரு மனைவியை திருப்திப்படுத்தும் விஷயங்கள்.

கதிரும் பாரதியும்...
கதிர் பாரதி கவி படித்து லக்ஷ்மியை கரக்ட் பண்ணிட்டான்டா என கொக்கரிக்கும் நபர்கள், மீம்ஸில் வறுத்தெடுக்கும் நபர்கள். அவன் அந்த கவியில் என்ன கூறினான் என அறியவில்லை.
இது லக்ஷ்மி மட்டும் கடந்து வந்த பாதை அல்ல. லக்ஷ்மி சென்ற பாதையில் இதன் முன் எத்தனை பாராளும் சக்திகள் சென்றார்கள் என்பதற்கு கணக்கில்லை. லக்ஷ்மி, பாரதி கண்ட புதுமை பெண் அல்ல. பாரில் அனைவரும் கண்ட, கண்டுக் கொண்டிருக்கும், காணவிருக்கும் சாதாரண பொண்ணு!
லக்ஷ்மிய திட்டுறதுக்கு முன்னாடி, லக்ஷ்மியோட புருஷன திருந்த சொல்லுங்க... லக்ஷ்மி புருஷன் வேற பொண்ண தேடி போகாமா இருந்திருந்தா... லக்ஷ்மி இன்னிக்கும் நிம்மதியா அந்த கொஞ்ச நேரம் மட்டும் சுவாசிச்சுக்கிட்டு ட்ரெயின்லயே போயிருப்பா பிரிண்டிங் பிரஸ்க்கு...
லக்ஷ்மி குறும்படம்...
லக்ஷ்மி பற்றி, கள்ளத்தொடர்பு, பாரதி கவிதை மீம்ஸ், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் மட்டும் கண்ட நெட்டிசன்களுக்கு.... இதோ! இதுதான் கடந்த இரு தினங்களாக சமூக தளத்தில் வைரலாக உலாவிக் கொண்டிருக்கும் லக்ஷ்மியின் வாழ்க்கை....



Click it and Unblock the Notifications